பிச்சை புகுதல்




கற்கை நன்றே!!. கற்கை நன்றே!!

பிச்சை புகினும் கற்கை நன்றே...

நன்றோ...?

நன்று கற்றும் பிச்சை புகுதல்..?

7 நண்பர்கள் புன்னகையை பதித்துள்ளனர்:

கோவி.கண்ணன் [GK] said...

//நன்று கற்றும் பிச்சை புகுதல்..?
//
அது தான் பொய் என்று நீங்கள் நிருபித்துவிட்டீர்களே !
//
நன்று கற்றும் பிச்சை புகுதல்..?
//
விடா முயற்சியோ, தன் நம்பிக்கையோ இல்லை என்று அர்த்தம்.

லிவிங் ஸ்மைல் said...

// அது தான் பொய் என்று நீங்கள் நிருபித்துவிட்டீர்களே ! //


இன்றைக்கு நல்ல பணியில் இருக்கும் நான் முன்பு பிச்சைக்காரியாகத் தான் ஒரு வருட காலம் என் வாழ்க்கையை நடத்தினேன்.. அந்த நாட்களில் என் மனதை அரித்துக் கொண்டிருந்த கேள்வி இது..

அதைத்தான், இப்பொழுது எனக்கு வாய்ப்பு கிடைத்துள்ள பட்சத்தில் கேட்டிருக்கிறேன்... ( தமிழ் மணத்தில் நடக்கும் கூத்து முழுக்க உங்களுக்கு தெரிந்திருந்தால், இப்போது இந்த கவிதையின் அரசியல் புரியும் )


// விடா முயற்சியோ, தன் நம்பிக்கையோ இல்லை என்று அர்த்தம் //

ஆரம்பம் முதல் என் பதிவினைப் படித்திருந்தால் என் முயற்சிகள் என்னென்ன என்பது தெரிந்திருக்கும்.

இறுதியாக, ஒன்று..

விதிவிலக்கு விதியாகாது!!!

G.Ragavan said...

நன்று கற்றும் பிச்சை புகுதல் நன்றல்லது.

நன்று மறப்பது நன்றன்னு நன்றல்லது
அன்றே மறப்பது நன்று

லிவிங் ஸ்மைல் said...

// நன்று மறப்பது நன்றன்னு நன்றல்லது
அன்றே மறப்பது நன்று //

என்ன சொல்ல வரீங்க... புரியல...

arunagiri said...

"கற்கை நன்றே!!. கற்கை நன்றே!!
பிச்சை புகினும் கற்கை நன்றோ...?
நன்று கற்றும் பிச்சை புகுதல்..?"

முயற்சிதன் மெய்வருத்தக்கூலி தரும் என்றே சொல்லத்தோன்றுகிறது. (Disclaimer: தமிழ்மணக்கூத்து பற்றி அறியேன். நடக்கும் ஏகப்பட்ட கூத்துகளில் எந்தக்கூத்தைச் சொல்கிறீர்கள் எனத் தெரியவில்லை.)

சுவாரசியமான முரண்களைக் காட்டும் கவிதைகள் அனைத்தும் அறிவாதார அடிப்படையில் சரியானவையாக இருக்க வேண்டுமென்ற அவசியமில்லை. அது போலத்தான் கல்வியுடனான பிச்சைக்கார/ பணக்காரத்தொடர்புகளும்.

பிச்சை எடுப்பது/ பணம் சேர்ப்பது இவற்றிற்கும் கல்வியறிவிற்கும் பெரிய தொடர்பில்லை. அறிவுச்செல்வம் அடைய பிற செல்வங்களை இழக்கத்துணிந்தவர்களெல்லாம் பணச்செல்வம் அடையும் பண்ட மாற்று வழியாகக் கருதி அவ்வாறு செய்யவில்லை. அவ்வையாரும் அந்த அர்த்தத்தில் இவ்வரிகளை எழுதவில்லை. கல்வியையே (பொருட்செல்வம் கொண்டுதரும் எளிய வழியாக அன்றி) தனிச்செல்வமாக இனம் கண்டு கல்விச்செல்வத்தினை விட ஒருவருக்கு 'மாடல்ல மற்றையவை" என வள்ளுவர் எழுதியதும் இதனால்தான்.

அய்ன் ராண்டின் Fountain head-இல் ஹோவர்ட் ரோவர்க் நன்று கற்றும் கூலி வேலை செய்வான். பாரதி வசதியாய் இருக்க வழி இருந்தும் வாடகை தர வக்கில்லாதவனாய்த்தான் வாழ்ந்தான். சுலபமாகப் பெரும் பணக்காரராய் இருந்திருக்கக்கூடிய மார்க்ஸும் அவர் மனைவியும், ஏங்கெல்ஸும் வறுமையையே தெரிந்தெடுத்தனர். பிச்சையெடுத்த சங்கரரிடமிருந்து அத்வைதம் வந்தது. வறுமையை ஏற்ற இளவரசன் புத்தன் ஆனான்.

சிந்தனையிலும் சரி உடற்கூறுகளிலும் சரி- விதி விலக்கான அனைவரும் (பாரதி, மார்க்ஸ், சங்கரர், சித்தார்த்தன், நீங்கள் உள்பட) விதிகளால் மட்டுமே தமது வாழ்க்கையை வரையறை செய்து கொண்டு விடலாம் என எண்ணிவிட முடியாது. அவ்வாறு செய்து விடவும் கூடாது.

பிச்சையெடுப்பதில் சிறுமைப்பட ஒன்றுமில்லை; ஆனால் அதில் பெருமைப்படவும் ஒன்றும் இல்லைதான். வறுமை என்பது ஒரு நிலை மட்டுமே- அந்த நிலையை ஏற்றுக்கொண்டு எதனைச் சாதிக்கிறோம் என்பது மட்டுமே அந்த வறுமைக்கும் பிச்சைக்கும் பெருமை சிறுமை என்ற அடையாளங்களைச் சம்பாதித்துத் தருகிறது. (இதுவே பணக்கார நிலைக்கும் பொருந்தும்தான்).

லிவிங் ஸ்மைல் said...

// பிச்சையெடுப்பதில் சிறுமைப்பட ஒன்றுமில்லை; ஆனால் அதில் பெருமைப்படவும் ஒன்றும் இல்லைதான். வறுமை என்பது ஒரு நிலை மட்டுமே- அந்த நிலையை ஏற்றுக்கொண்டு எதனைச் சாதிக்கிறோம் என்பது மட்டுமே அந்த வறுமைக்கும் பிச்சைக்கும் பெருமை சிறுமை என்ற அடையாளங்களைச் சம்பாதித்துத் தருகிறது. (இதுவே பணக்கார நிலைக்கும் பொருந்தும்தான்). //

தத்துவார்த்தமாக பார்க்கையில் இதில் (பிச்சை புகுவதில்) ஒன்றும் இல்லை தான்.. ஆனால் நீங்கள் சொன்ன உதாரணம் அனைத்திலும் வறுமை மற்றும் பிச்சை என்பது அவர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டது அல்லது பணம் சாராத அவர்களது நிலையை பொருத்து அமைந்தது.

ஆனால், காலம் காலமாக ஒரு குறிப்பிட்ட சமூகம் (திருநங்கைகள்) பிச்சை எடுக்கவும், விபச்சாரத்திற்கும் விதிக்கப்பட்டிருப்பதைத்தான் கேள்வியாக முன்னிருத்த விரும்பினேன். ஏனெனில், மறுத்தாலும் இன்று கல்வி என்பது சம்பாத்தியத்திற்கான மூலதனம்/தகுதி என்ற நிலையில் அத்தகுதி இருந்தும் கூட எங்களது பிறப்பின் காரணமாக மட்டுமே நாங்கள் தொடர்ந்து பிச்சைக்காக விதிக்கப்படுவதையே நொந்து கொள்கிறேன்...

நன்றி...

Unknown said...

you wrote your pains.