அரசி : சில எதிர்ப்பும், எதிர்பார்ப்புகளும்



திருநங்கைகளின் மீதான ஊடகங்களின் அபத்த சித்தரிப்பை எதிர்த்து நான் எழுதி வெகுஐன பத்திரிக்கை ஒன்றில் வெளிவந்திருந்த கட்டுரை திருநங்கைகளிடையே நல்ல விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளது. அந்த வகையில், எனக்கு மகிழ்ச்சி. விசயம் அதுவல்ல.

சமீபத்தில் அரசி தொலைக்காட்சித் தொடர் பற்றி நான் எழுதி, அது விவாதமாகி குழம்பிக் கொண்டிருக்கும் நிலையில்... இரண்டு நிகழ்ச்சிகள் சற்று ஆறுதலடையும் படி நிகழ்ந்துள்ளன.

1. திருச்சியை மையமாகக் கொண்டு இயங்கி வரும் தென்னிந்திய அரவானிகள்
நலச்சங்கத்தின் தலைவியான திருமிகு. மோகானம்மாள் அவர்கள் 20/03/2007(செவ்வாய்)
அன்று சென்னையில் திருமிகு. R. ராதிகா சரத்குமார் அவர்களை நேரில் சந்தித்து தன்
கடுமையான எதிர்ப்பை தெரிவித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து திருமிகு. R. ராதிகா சரத்குமார் அவர்கள் தொடர்ந்து வரும்
நாட்களில் சர்ச்சைக்குள்ளான கங்கா கதாபாத்திரத்தை நேர்மறையான
பாத்திரமாக மாற்றிவிடுவதாக கூறியுள்ளார்.

2. இது நடந்து கொண்டிருக்க, சென்னையில் இயங்கி வரும் THAA என்ற தொண்டு
நிறுவனத்தின் தலைவரான திருமிகு. ஆஷா பாரதியுடன் நான் 20/03/2007(செவ்வாய்)
அன்று தொலைபேசியில் தொடர்பு கொண்டு விவாதித்தேன். அதன்படி, அரசி தொடருக்கு
ஸ்டே (தமிழ் வார்த்தை தெரியவில்லை. ஸ்டே ஓ.கே. தானே..?!) வாங்க
திருமிகு. ஆஷா பாரதி அவர்கள் உயர் நீதிமன்ற வழக்கு தொடருவது என்பதாக
உத்தேசித்திருந்தோம். ஆனால், 22/03/2007 (வியாழன்) வழக்கறிஞ்சர்கள் நீதிமன்றத்தை
புறக்கணித்தால் வழக்கு தொடரமுடியவில்லை. எனவே இன்று (22/03/2007)நிச்சயம்
வழக்கு பதிவதாகவும், பத்திரிக்கைகளுக்கு செய்தியளிப்பதாகவும் திருமிகு. ஆஷா பாரதி
அவர்கள் கூறியுள்ளார்.



இதுநாள் வரையிலான ஊடக வன்முறையை யாரும் கடுமையாக எதிர்த்திராத நிலையில் இன்று இத்தகைய முயற்சிகள் மாற்றத்திற்கான நல்ல அறிகுறியாகவே படுகிறது. ஆனாலும் முதல் செய்தியின் படி திருமதி. R. ராதிகா சரத்குமார் அவர்கள் கூறுவதைப் போல் கதாப்பாத்திரத்தை நேர்மறையாக மாற்றப் போவதால் (நிச்சயம் மாற்றுவார்களா..?) என்ன பயன் கிடைக்கும். இது எப்படியென்றால் ஊரே சேர்ந்து ஒரு அப்பாவியை நடுத்தெருவில் நிக்க வைத்து வேண்டிய அளவு செருப்பால் அடித்து நாசாமாக்கிவிட்டு. பிறகு பாவம் போனா போகுதுன்னு ஜண்டு பாம் தடவுவதைப் போலவே இருக்கும். இது போதுமானதாகாது.

இரண்டாவது செய்தியின் படி ஸ்டே வாங்கினாலும் கூட அது எந்த அளவிற்கு சாத்தியம் என்பதும் உறுதி இல்லை. ஏனெனில் சமீபத்தில் வந்த திரைப்படமான பருத்தி வீரன் வெளியாகக் கூடாது என்று நிஐ பருத்தி வீரனின் இரண்டாவது மனைவி வழக்கு தொடர்ந்து இருக்க, படமோ எந்த தொந்தரவுமின்றி வெற்றிகரமாகத் தானே ஓடிக் கொண்டிருக்கிறது.


எனில் செய்யப்பட வேண்டியது என்னவென்றால்...


உண்மையிலே இப்பிழையை திருமதி. R. ராதிகா சரத்குமார் உணர்ந்து. மேற்படி கதாபாத்திரத்தையே முற்றாக தொடரிலிருந்து நீக்க வேண்டும். (ஏற்கனவே, திருமிகு. சரிதா பின்வாங்கியதன் படித்தானே கதையையே மாற்றப்பட்டது. எனவே இந்த சிறிய கதாபாத்திரத்தை மாற்றுவதென்பது பெரிய சிக்கலாகாது) அதோடு தொடரில் நேரடியாகத் தோன்றி மக்கள் அனைவரும் திருநங்கைகளை மதிக்க வேண்டும், அவர்களும் நம்மை போன்ற சகமனுஷிகளே என்று கூறி, தனது தவறுக்கும் பொது மன்னிப்பும் கேட்க வேண்டும்.


இதுவே அரசி திருநங்கைகளுக்கு இழைத்த அநியாயத்திற்கு சரியான மாற்றாகவும், இதுபோல் இனி நிகழாமைக்கு சிறந்த முன்னுதாரணமாகவும் இருக்கும்.


அவ்வாறு நடக்கும் பட்சத்தில் பெண் என்ற போதும் மனமுவந்து திருமதி. R. ராதிகா சரத்குமாரை அவமானப்படுத்தியதற்காக சிரம் தாழ்த்தி மன்னிப்பு கோருவதில் லிவிங் ஸ்மைலுக்கு தயக்கம் கிடையாது.

17 நண்பர்கள் புன்னகையை பதித்துள்ளனர்:

- யெஸ்.பாலபாரதி said...

//அவ்வாறு நடக்கும் பட்சத்தில் பெண் என்ற போதும் மனமுவந்து திருமதி. R. ராதிகா சரத்குமாரை அவமானப்படுத்தியதற்காக சிரம் தாழ்த்தி மன்னிப்பு கோருவதில் லிவிங் ஸ்மைலுக்கு தயக்கம் கிடையாது. //

குட்! வெல்டன்!

சென்ஷி said...

நன்று...

சென்ஷி

தருமி said...

very much appreciate such positive steps.

GO AHEAD ...

said...

ஸ்டே- தடையுத்தரவு

//உண்மையிலே இப்பிழையை திருமதி. R. ராதிகா சரத்குமார் உணர்ந்து. மேற்படி கதாபாத்திரத்தையே முற்றாக தொடரிலிருந்து நீக்க வேண்டும். (ஏற்கனவே, திருமிகு. சரிதா பின்வாங்கியதன் படித்தானே கதையையே மாற்றப்பட்டது. எனவே இந்த சிறிய கதாபாத்திரத்தை மாற்றுவதென்பது பெரிய சிக்கலாகாது) அதோடு தொடரில் நேரடியாகத் தோன்றி மக்கள் அனைவரும் திருநங்கைகளை மதிக்க வேண்டும், அவர்களும் நம்மை போன்ற சகமனுஷிகளே என்று கூறி, தனது தவறுக்கும் பொது மன்னிப்பும் கேட்க வேண்டும்.//

நல்ல தீர்ப்பு, இடைவிடாத போராட்டங்களின் மூலமாக யாரையும் பணியவைக்க முடியும், போராடுங்கள்..

தோழமையுடன்
ஸ்டாலின்

துளசி கோபால் said...

நல்லது வித்யா.

லக்கிலுக் said...

Very good

குலவுசனப்பிரியன் said...

என் காலம் கடந்த பின்னூட்டம். இருந்தாலும் உங்களுக்கு ஆதரவாக ...

உயிரோட எரிக்கப் போறோம்,
நீ ஏன் கிடந்து கத்துறவ.
ஊர்கூடி செயம்பாட மானத்தை வாங்கப் போறோம்,
நீ ஏன் வந்து துப்புறவ.
தேரடியே தள்ளிவிட்டு நற்கதி குடுக்கப் போறோம்,
நீ ஏன் பிடுங்கிப் பிறாண்டுறவ.

சாமிய குத்தஞ் சொன்னா தடை போடும் அரசாங்கம்,
சாமியே குத்தஞ் சொன்ன திருநங்கை உடன்பிறப்பை
இல்லவே இல்லையின்னு தான எடை போடும்.?

நீ ஏன் கிடந்து கத்துறவ.
நாயகி அழுகையில எல்லாம் அடங்கிப் போகும்.

இலவசக்கொத்தனார் said...

நல்ல ஆரமபம். படிப்படியாக சமூகத்தின் பார்வை மாறி இது போன்று இனி நடக்காமல் இருக்க என் பிரார்த்தனைகளும்.

Anonymous said...

இரண்டு நாள் முன்னாடி பருத்தி வீரன் பாட்டு ஒண்ணு டீ.வில பாத்தப்போ நினைச்சேன், இதை எதிர்த்து கேஸ் போடுவாங்களான்னு.

பாட்டு மட்டும் கேட்டப்போ, சில பாடல்கள் நாட்டுப்புற கலை கலந்து நல்லா இருந்தது - படமாக்கப்பட்ட விதம் பாத்தப்போ, இந்த கேள்வி தோன்றியது.

உங்களுடைய பதிவு படிச்சப்புறம், கொஞ்சம் நிம்மதி கிடைத்தது - ஏதோ ஒரு விஷயத்தில் எதிர்ப்பு நடக்கிறது என்று. நான் அரசி பாக்குறதில்லை, ஆனா புரிந்து கொண்டேன் பதிவு படித்து.

Its good to hear such good activism.

Ravi said...

Vidya, I don't understand why so much fuss is being made about this. I think the character is about one particular person - not everyone from that community. And in Bombay, as I have read and heard, many eunchs do engage in such profession.

Largely (as I quoted in one of my earlier comments), still many eunuchs do resort to cheap antics like begging and intimidating public. I think we would need to educate them and only by doing so will the stigma on such people change. Padathil chitharikkapaduvathai mattum edhirthaal enna payan? Check what the reality is...

Unknown said...

வித்யா, அங்க கொத்ஸு பதிவுல நேத்து தான் பின்னூட்டம் போட்டேன்... இங்க வந்து படிச்சா ... ரொம்ப சந்தோஷமா இருக்கு. உங்கள் / திருமிகு மோகானாம்மாள் அவர்களின் முயற்சிகளுக்கு வாழ்த்துக்கள். (உங்கள் முயற்சி: மொழியில் வெற்றி;-))

Ravi Sir, //...do resort to cheap antics like begging and intimidating public// Please refrain from making any such comments. This is applicable across the board to all communities also. On a good note, when depiction of someone based on their physical challenges / orientation / race is wrong and if that mistake is accepted and remedied by the involved parties, this will hopefully set precedence to all who suffer in silence.

On the side, ஆனா, என்னிக்கு சினிமாவுல பொம்பளங்களுக்கு தள்ளுபடி;-) இல்லாம நல்ல உடைகளை கொடுத்து சினிமா ஓடப் போவுது சொல்லுங்க;-))

Ravi also said, //we would need to educate them and only by doing so will the stigma on such people change// It is very obvious from this whole comment that education has to extend beyond "them".

வித்யா, உங்களுக்கு வாழ்த்துக்கள்.
கெ.பி.

பாரதி தம்பி said...

இங்க்லீஸ்ல கருத்து சொல்ற பல பயபுள்ளைகளுக்கு எங்கேருந்துதான் இந்த எரிச்சல் வருதோ தெரியலை. நல்லதா இருந்தா எத்துங்குங்களேன்..என்ன இப்போ குறைஞ்சுப் போயிடப்போறீங்க..?

அபி அப்பா said...

இது தான் சரி வித்யா! வெரிகுட்!!

லிவிங் ஸ்மைல் said...

நண்பர்களின் கவனத்திற்கு...

எனது எதிர்ப்பு கட்டுரை நடப்பு தமிழன் எக்ஸ்புரஸ் இதழில் வெளிவந்துள்ளது...

லிவிங் ஸ்மைல் said...

நண்பர்களின் கவனத்திற்கு...

எனது எதிர்ப்பு கட்டுரை நடப்பு தமிழன் எக்ஸ்புரஸ்(மார்ச் 29,2007) இதழில் வெளிவந்துள்ளது...

லிவிங் ஸ்மைல் said...

நண்பர் ஒருவர் அனுப்பியிருந்த பின்னூட்டமிது...

/// Sridhar Venkat said...


நேற்று (11-Apr) ஒளிபரப்பட்ட பாகத்தில், அந்த திருநங்கை பாத்திரம் இந்த சமூகத்தின் மேல் பல்வேறு கேள்விகளை எழுப்புவதாக காட்டினார்கள். கொஞ்சம அமெச்சூர்தனமாக இருந்தாலும், தொலைக்காட்சி ஊடகத்தில் அது ஒரு முக்கியமான முயற்சியாகத்தான் எனக்கு பட்டது.

இந்த பதிவுக்கு சம்பந்தமாக இருக்கும் என்று நினைத்ததால் இங்கு இட தோன்றியது. நன்றி! ////

லிவிங் ஸ்மைல் said...

பதிவிலிருந்து....

////1. திருச்சியை மையமாகக் கொண்டு இயங்கி வரும் தென்னிந்திய அரவானிகள்
நலச்சங்கத்தின் தலைவியான திருமிகு. மோகானம்மாள் அவர்கள் 20/03/2007(செவ்வாய்)
அன்று சென்னையில் திருமிகு. R. ராதிகா சரத்குமார் அவர்களை நேரில் சந்தித்து தன்
கடுமையான எதிர்ப்பை தெரிவித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து திருமிகு. R. ராதிகா சரத்குமார் அவர்கள் தொடர்ந்து வரும்
நாட்களில் சர்ச்சைக்குள்ளான கங்கா கதாபாத்திரத்தை நேர்மறையான
பாத்திரமாக மாற்றிவிடுவதாக கூறியுள்ளார்./////


//// ஸ்டாலின் said...

இடைவிடாத போராட்டங்களின் மூலமாக யாரையும் பணியவைக்க முடியும், போராடுங்கள்..

தோழமையுடன்
ஸ்டாலின் ////

//Sridhar Venkat said...


நேற்று (11-Apr) ஒளிபரப்பட்ட பாகத்தில், அந்த திருநங்கை பாத்திரம் இந்த சமூகத்தின் மேல் பல்வேறு கேள்விகளை எழுப்புவதாக காட்டினார்கள். கொஞ்சம அமெச்சூர்தனமாக இருந்தாலும், தொலைக்காட்சி ஊடகத்தில் அது ஒரு முக்கியமான முயற்சியாகத்தான் எனக்கு பட்டது.

இந்த பதிவுக்கு சம்பந்தமாக இருக்கும் என்று நினைத்ததால் இங்கு இட தோன்றியது. நன்றி! //


இனி நான் said...

இது திருநங்கைகளின் மீதான வன்முறைக்கு எதிரான ஆரம்ப கட்ட வெற்றியாகும், இனி தொடர்ந்து இத்தகைய தவறான சித்திரப்புகள் தொடராது என்றே நம்புவோம்.

இது குறித்து தோழர். ஸ்டாலின் சொன்னதையே நான் வழிமொழிகிறேன்.