ஸ்மைல் : வயர்டு / ஒயர்டு / weired

அழைத்தமைக்கு நன்றி ஆழியூரான் அவர்களே...ஆக்சுவலி இந்த வயர்டு/ஒயர்டு/weired என்ற வார்த்தையை ரீசண்டா தான் நான் கேள்விபட்டேன். இப்பவும் இதுதான் அர்த்தம்னு தெளிவா தெரியாது. இருந்தாலும், பதிவுகளைப் படிச்சு புரிஞ்சிகிட்டதன் படி என் தரப்பு செய்திகளை மிகச் சுருக்கமாக தருகிறேன். நன்றி!!

என்னை இந்த விளையாட்டுக்கு அழைத்த நண்பர் ஆழியூரானுக்கு நன்றி!! ஏற்கனவே சுடர் ஏற்ற அழைத்த பொடிச்சியின் வேண்டுகோளை நிறைவேற்றமுடியாமைக்கும் மன்னிப்புக் கோரி இப்பதிவை பொடிச்சிக்கு டெடிகேட் செய்கிறேன்..

1. பயம் : எதிர்பாரமல் எழும் சிறிய சப்தம் (இருமல், பாத்திரங்கள் விழும் ஓசை, குறிப்பா சினிமாவில் வரும் துப்பாக்கி போன்ற அதீத சவுண்ட்ஸ்) முதல் தெரு நாய் (ஒரு தடவ கடி வாங்கி பரிந்துரைக்கப்பட்ட ஏழு ஊசியில் ஐந்து மட்டும் போட்ட அனுபவம்) வரை தொட்டதுக்கெல்லாம் பயந்து சாவது

2. அடமண்ட் : என்ன தான் பயந்தாங்கொள்ளியா இருந்தாலும் ஒரு கட்டத்துக்கு மேல டென்சன் ஆயிட்டா மண்டயெ பொளந்தாலும் சரிதான்னு துணிஞ்சி மல்லுக்கு நிற்பது (ஒரு முறை நாகர்கோயில் வண்டியில் தனியாளாக பத்து, பதினைந்து திருநெல்வேலி வீர சூரர்களிடம் மரண அடி வாங்கியும் துணிஞ்சி அடிக்குஅடிக்கு பதில(பதில்தான்)டி கொடுத்தது).

3. ஆ.கோ. : ஒரு விசயத்தில கமிட் ஆயிட்டா அத செய்து முடியிற வரைக்கும் கொஞ்சம் ஓவரா டென்சனோட இருக்குறது. அதுமட்டும்தான் இப்போதைக்கு தலயாய பிரச்சனை மாதிரி பில்டப் கொடுப்பது.

4. செலவாளி : மாசம் 5,000/- சம்பளம் வாங்கினாலும் சரி, பூனேல தினசரி 900-1,100 வரை தெறமயா பிச்சையெடுத்தப்பையும் சரி, கையல 5 பைசா நிக்காத செலவாளி... அந்த செலவும் உருப்படியா இருக்காது. ட்ரஸ்,டிசைன் டிசைனா தோடு, வளையல் (ஒன்னுகூட தங்கமில்லிங்க) புக்ஸ்(அப்பிடியே படிச்சிட்டாலும்), காஸ்டிலி சாப்பாடு, ஊர் சுத்துறது, சினிமா (பாக்கனும் கட்டம் கட்டிட்டா தனியாவாச்சும் போயிருவேன்) அடுத்த நாள் 10 ரூபாயை வச்சிட்டு பேன்னு முழிச்சிட்டு இருக்க வேண்டியது (ரொம்ப கொடுமடா சாமி)

5. படிப்பு : சின்ன வயசுல பாட புத்தகம், இல்ல லைப்ரரி புத்தகம்னு (என் விசயத்துல, இளம் வயதில் புத்தகங்கள் தான் தோழியா தோள்கொடுத்தது) புத்தக புழுவா நெளிஞ்சிகிட்டு இருப்பேன். கல்லூரி நாட்களில் ஜெயகாந்தன் தொடங்கி சாரு நிவேதிதா வரை பிரிச்சு மேய்ஞ்சிட்டு இருந்தேன். (கண்டிப்பா வரவனை ரேஞ்சுக்கெல்லாம் போனதில்லை). எனது பூனே நாட்களுக்கு பிறகு புனைவின் மீதும், ஆசிரியர்கள் மீதும், இருந்த கிரேஸ் குறைந்து கட்டுரைகள் மீது ஆர்வமாயிட்டேன். நாள்பட ஆழியூரான் மாறி சோம்பேறியாயிட்டேன். (திரும்பவும் கொஞ்சம் தீவிரமா படிக்கனும்னு ஏப்ரல்-01ல இருந்து முடிவு பண்ணிட்டேன்.)

சினிமா : இயல்பிலேயே நல்ல நடிகையா, நல்ல திரை இயக்குநராகனும்னு ஆசை இருப்பதால் எளவு சினிமா பாக்குறது வெறி சோத்துக்கு வழியில்லாட்டியும் கடன் வாங்கியாவது சினிமா பார்க்கனும் (சமீபத்தில் வந்த ட்ராபிக் சிக்னல் மாதிரி படமா இருந்தா மட்டும் இந்த விதி பொருந்தும். கடன் வாங்கி, ஆட்டோ புடிச்சு தியேட்டர்ல நின்னா பாவிங்க படத்தையே தூக்கிட்டாங்க, கூடுதலா கடன் வாங்கி சி.டி.ய வச்சு அழகு பாத்துட்டு இருக்கேன்)

இப்போதைக்கு இந்த வியர்டு போதும்... அடுத்த சீசன்ல மத்தத பகிர்ந்துகிறேன்..

இந்த விளையாட்டுக்கு,

அசுரன்,
ராஜ் வனஜ்,
வாய்ஸ் ஆப் விங்க்ஸ்,
பொடிச்சி,
ஆகியோரை அழைக்கிறேன்...

வந்து உங்க வண்டவாளத்த தண்டவாளத்துல ஏத்துங்க பாப்பம்...

12 நண்பர்கள் புன்னகையை பதித்துள்ளனர்:

பாரதி தம்பி said...

சமர்த்துப்பிள்ளையா உடனே வந்துட்டீங்களே...நன்றி வணக்கம், மெயின் ரோடு, திருநெல்வேலி.

லக்கிலுக் said...

இந்த வியர்டு இண்ட்ரஸ்டிங்கா இருக்கு....

தமிழ்நதி said...

வித்யா!நாளைக்குன்னு ஒரு பைசா சேத்துவைக்காம செலவழிக்கிறதுல நான் கூட உங்கள மாதிரித்தான். உங்களுக்கு சினிமான்னா எனக்குப் புத்தகம். எல்லாருக்குள்ளயும் இப்பிடிப் பல வியர்டு இருக்கும்போல... நானும் எழுதணும். என்னோட நடவடிக்கை எல்லாமே வியர்டாத்தான் இருக்கும் அதான் கொஞ்சம் யோசிக்க வேண்டியிருக்கு.

G.Ragavan said...

ஒங்களையும் ஜோதியில இழுத்தாச்சா! சூப்பர்.

டிராபிக் சிக்னல் சமீபத்தில் நான் பார்த்த படம். என்னை மிகவும் பாதித்த படம். மிகவும் அருமையான படம். அதைப் பற்றி ஒரு பதிவு போட வேண்டும் என்றுதான் நினைக்கிறேன். நேரந்தான் கிடைக்க மாட்டேங்குது!

பங்காளி... said...

--//திரும்பவும் கொஞ்சம் தீவிரமா படிக்கனும்னு ஏப்ரல்-01ல இருந்து முடிவு பண்ணிட்டேன்.//--

ஏப்ரல் 1ம் தேதிய முடிவா....அப்பச்சரி...நான் நம்பீட்டேன்.

லிவிங் ஸ்மைல் said...

// G.Ragavan said...

டிராபிக் சிக்னல் சமீபத்தில் நான் பார்த்த படம். என்னை மிகவும் பாதித்த படம். மிகவும் அருமையான படம். அதைப் பற்றி ஒரு பதிவு போட வேண்டும் என்றுதான் நினைக்கிறேன். நேரந்தான் கிடைக்க மாட்டேங்குது! //

please do it soon..

படம் தான் பாக்க முடியல... ரிவ்யூ(அதும் ஜி.ரா. எழுதினத)யாவது படிச்சு அறிஞ்சிக்குவோம். ஏற்கனவே ஒருவர் எழுதியதை படிச்சிருக்கேன்.

படத்தில் ஒரு காட்சி திருநங்கை பிச்சையெடுப்பதாக ட்ரைலர் ஒன்றில் பார்த்தேன். முடிந்தால் இதை நன்கு விளக்கி எழுதவும்.

நன்றி

அசுரன் said...

டிராபிக் சிக்னல் படத்தை சிடில பாக்கலாம்னு வாங்கினேன். என்னோட சிஸ்டமே ஏதோ பிரச்சயில படுத்துருச்சு.... :-((

படம் பாக்க முடியல

அசுரன்

VSK said...

ம்ம்ம்ம்ம்.... நான் தான் முதலில் கூப்பிடேன்.
:(
ஆழியூராருக்கு அடிச்சுது யோகம்!
நல்லாவே இருக்கு!
:)

சரண் said...

வியர்த்து விதிர்விதிர்க்க வைத்து விட்டது உங்க வியர்டு! தமிழ் சினிமாவில் திருநங்கைகளை மையப்படுத்த ஒரு பாஸிட்டிவான கதை சொன்ன என் வருங்கால இயக்குநர நண்பனைப் பார்த்த அப்போது ''என்னடா இது கதையா?" என்று முதலில் சளித்துக் கொண்டேன். ஆனால் தற்போது உங்களைப் போல திறமைசாலிகள் திருநங்கைகளின் குரலாக.. பிரதிநிதியாக வெளியே தெரிவதைப் பார்த்து திருநங்கைகளின் சோகமும் துயரத்தோடு வாழ்வியல் எதார்த்தத்தையும் எனக்கு உணர்த்தி விட்டது. நிச்சயம் தமிழ் சினிமா உங்களை வரவேற்கும். சீரியஸாய் முயற்சி செய்யுங்கள்.