மே நாள் வாழ்த்துக்கள்

உழைத்து வாழும் உயரிய வாழ்க்கை அமையப் பெற்றவர்க்கும், உழைப்பின் கனியை வியர்வையாய் புசித்துக் கொண்டிருக்கும் எனது அனைத்து தாய், தந்தை, சகோதரி, சகோதர உள்ளங்களுக்கு...உழைப்பு மறுக்கப்பட்ட குழுவின் சார்பில் மே-நாள் சிறப்பு வாழ்த்துக்கள்!!

3 நண்பர்கள் புன்னகையை பதித்துள்ளனர்:

லிவிங் ஸ்மைல் said...

பிபேதா-1

முத்துகுமரன் said...

உழைக்கும் தோழர்களுக்கு இனிய மேதின வாழ்த்துகள்

சந்திப்பு said...

சகோதரி வித்யாவுக்கு மேதின வாழ்த்துக்கள்! உலகத்தில் ஒரு சிறுபான்மை பிரிவினர் பெரும்பான்மை உழைப்பாளிகளை உழைத்தால்தான் வாழ முடியும் என்ற நிலைக்கு தள்ளியுள்ளனர். உழைப்பாளிகளுக்கு உழைப்பு எனும் அடிமை விலங்கை தவிர வேறு எதுவும் இல்லை. உழைப்பின்றி உழைப்பாளியால் ஒரு நாள் கூட வாழ முடியாது! இதுதான் முதலாளித்துவ சமூகத்தின் அடித்தளம்.

உழைப்பின் கனியை அனுபவிப்பவர்கள் நவீன முறையில் நமக்குத் தெரியாமலே சுரண்டிக் கொண்டிருக்கும் முதலாளிகள்தான். உழைப்பின் கனியை உழைப்பாளிகள் சுவைக்கும் சமூக அமைப்பு சோசலிசத்தில் மட்டுமே சாத்தியம்! அதுவரை இந்த கண்ணுக்குத் தெரியாத அடிமைத்தனத்தை உடைத்து எறிவதற்கான போராட்டத்தில் இணைத்துக் கொள்வதே நாம் மே தினத்திற்கு செய்யும் உயரிய கடமையாகும்.

உழைப்பு என்பது கடப்பாறையையும், சம்மட்டியையும் தூக்கிக்கொண்டு வேலை செய்வது மட்டுமல்ல. அலுவலகத்தில் கணிணி முன்னோ அல்லது வேறு வகையிலோ மூளையை உபயோகித்து பணிபுரிவதும் உழைப்பாளி வர்க்கத்தின் ஒரு பகுதியே. அதாவது, கருத்தாரலும், கரத்தாலும் உழைக்கும் உழைப்பாளிகள் இருவேறு பகுதியினர் அல்ல. இருவமே சுரண்டப்படும் வர்க்கத்தினரே! ஒன்றுபடுவோம்! போராடுவோம்! வெற்றி பெறுவோம்!