WINGS OF EVOLUTION

ACCESSIABLE HORIZON FILMS நிறுவனம் சார்பாக, ரமேஷ் மூர்த்தி, ரகு ஜெகந்நாதன் இயக்கத்திலும், கௌசல்யா ஜெகந்நாதனின் எடிட்டிங்கிலும் ஸ்ரீகாந்த் தேவராஜன் இசையிலுமான கூட்டு முயற்சியில் உருவான 40 நிமிட ஆவணப் படம் விங்ஸ் ஆஃப் எவெல்யூசன் .



நம் சிறகு மாண்டஸோரி பள்ளி குறித்த அழகிய ஆவணப் படம் இது கடந்த அக்டோபர் 6 ஆம் தேதி சர்வதேச தெற்காசிய திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது. மெயின் பிட்சர் டௌன்லோட் செய்ய முடியவில்லை. வேறு வாய்ப்பிற்காக யூ டூயூபின் உதவியை நாடிய போது படத்தின் ட்ரைலரும், அது தொடர்பான மற்றொரு ட்ரைலரும் கிடைத்ததன. நண்பர்களின் பார்வைக்காக தந்துள்ளேன்.

விங்ஸ் ஆஃப் எவல்யூசன்



WORLD WIDE POST CARD SHARING




வளர வாழ்த்துவோம்!!



PEACE

3 நண்பர்கள் புன்னகையை பதித்துள்ளனர்:

லிவிங் ஸ்மைல் said...

சோதனைப் பின்னூட்டம்

cheena (சீனா) said...

படம் பார்க்க முடியவில்லை. மற்ற பதிவுகளில் படித்ததின் அடிப்படையில் சிறகு மாண்டிஸோரி பள்ளியினை வாழ்த்துகிறேன். எண்ணங்கள் நோக்கங்கள் நிறைவேற வாழ்த்துகள்

பாண்டித்துரை said...

நிகழ்ச்சித் தொகுப்பாளராக ஒரு அரவாணி

தமிழ் நாட்டைச் சேர்ந்த ரோஸ் என்கிற அரவாணி, தனியார் தமிழ் தொலைக்காட்சி ஒன்றில் நிகழ்ச்சியை வழி நடத்தும் தொகுப்பாளராக விரைவில் செயல்பட இருக்கிறார்.

வழக்கமாக ஆண் அல்லது பெண் நிகழ்ச்சி தொகுப்பாளர்கள் மாத்திரமே தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை வழி நடத்தி வருகிறார்கள்.

போட்டி நிறைந்த இந்த துறையில், ஆணாக பிறந்து பால் மாற்று அறுவை சிகிச்சை மூலம் பெண்ணாக மாறிய அரவாணியான ரோஸ் நுழைந்திருப்பது, ஒதுக்கப்பட்ட பாலினத்தவரின் முன்னேற்றத்தில் முக்கிய மைல் கல்லாக பார்க்கப்படுகிறது.

தமிழ் சமூகத்தில் மூன்றாம் பாலினமான அரவாணிகள் குறித்து மிகவும் மலிவான கருத்துருவாக்கம் நிலவுவதாக கூறும் ரோஸ் அவர்கள், இந்த தவறான புரிதலைப் போக்குவதற்காகவே, தாம் ஊடகத்துறையை தேர்ந்தெடுத்ததாக தமிழோசையிடம் தெரிவித்தார்.

தாம் வழி நடத்த இருக்கும் வாராந்த தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சி, சமூகத்தின் அனைத்து விதமான பிரச்சினைகளைப் பற்றியும் விவாதிக்கும் என்றாலும், அரவாணிகள் மற்றும் பாலினமாறிகள் தொடர்பான பிரச்சினைகள் முக்கியமாக இடம்பெறும் என்கிறார் ரோஸ்.

தமிழோசைக்கு ரோஸ் அவர்கள் அளித்த பிரத்யேக செவ்வியை நேயர்கள் இன்றைய செய்தி அரங்கத்தில் கேட்கலாம்.




http://www.bbc.co.uk/tamil/highlights/story/2007/10/071018_rose111.shtml

தோழி மேலே உள்ள வலைதளப்பகுதியை தாங்கள் படித்திருக்ககூடும். இருந்தாலும் புன்னகைளின் பார்வைக்கு. எனது வலைப்பக்கத்திலும் இந்த செய்தியை இன்று பதிவு செய்கிறேன்.
சென்னையில் தங்களின் வாசம் எப்படி உள்ளது?

www.pandiidurai.wordpress.com