நன்றி " WELCOME TO SAJJANPUR "
திருநங்கைகளை மனிதர்களாக காட்டிய இந்தியத் திரைப்படங்கள் வெகு சில என்பது நாம் அறிந்ததே. தமிழில் கூட வெளிவரக் காத்திருக்கும் சில படங்களில் திருநங்கைகளை கௌரவமாக காட்டும் பணிகள் நடந்து வருகின்றன. நந்தலாலா, பால், நான் கடவுள், தெனாவெட்டு, கருவறைப் பூக்கள் என சிலவற்றைக் கூறலாம். ஹிந்தியில் தமன்னா, ட்ராபிக் சிக்னல் மற்றும் சில படங்கள் கண்ணியமான முயற்சிகள்.


இயல்பான கிராமத்தையும், போகிரபோக்கில் அக்கிராமத்தின் வன்முறையையும் சொல்லி சொல்லும் எளிமையான படம் " WELCOME TO SAJJANPUR ". படத்தில் நல்ல விசயங்கள் பல இருந்தாலும் அதைச் சொல்வதற்கல்ல இப்பதிவு.


ஒருசிலரைத் தவிர எழுத்தறிவு முற்றாய் அற்ற சாஜன்பூர் கிராமத்தில் முன்னிபாய் என்ற 45 வயது மதிக்கத்தக்க திருநங்கை கதாபாத்திரம். உத்திரப்பிரதேசத்து typical திருநங்கையாக வரும் முன்னிபாய் அக்கிராமத்தின் அதிகாரமிக்க பணக்காரன் ராம் சிங்கின் மனைவி ஜமுனா தேவியை எதிர்த்து தேர்தலில் நிற்கிறார். ஆரம்பத்தில், வழக்கமான திருநங்கைகள் போல கைதட்டி பாட்டுப்பாடி தெருக்களில் அலப்பரையாக வலய வரும் முன்னிபாய் மற்றும் குழுவினரை பார்த்து பயந்து அசூசையுடனே எதிர்கொள்கிறான் நாயகன் மகாதேவ் (பார்வையாளர்களின் சார்பில்)

தேர்தல் பிரசாரத்திற்கு பணங்களை வாரியிரைத்து வசதியாக வலம் வரும் ராம் சிங்கிற்கு எதிராக எளிய முன்னிபாய் உற்சாகமாய் பாட்டுப் பாடி அனைவரையும் கவர்கிறார். ( பாடலின் பொருள் தெரியவில்லை, தெரிந்தவர்கள் அறியத்தரலாம். ) தனது கிராமத்து தேர்தலில் ஒரு திருநங்கை போட்டியிடுவதை அவமானமாக கருதும் ராம்சிங், கடிதம் எழுதித்தரும் மகாதேவிடம் கலெக்டரிடம் முன்னி பாய் தேர்தலில் போட்டியிடுவதை தடை செய்யுமாறு மனுபோடச் சொல்கிறான். அப்போது மகாதேவ் சொல்கிறான் இது கலியுகம் இனி திருநங்கைகளும் போட்டியிடலாம் என்று.


பணபலத்தாலும், ஆள்பலத்தாலும் முன்னிபாயை மிரட்ட முயற்சி செய்கிறான் ராம்சிங். ஒரு இரவில், மகாதேவ் டி.வியில் மாதுரி தீட்சித்தை ரசித்துக்கொண்டிருக்கும் போது, அவன் வீட்டை தட்டுகிறார் முன்னிபாய். வீட்டிற்குள் வரவும் தயங்கி நிற்கும் முன்னிபாயை தர்மசங்கடத்துடன் உள்ளே வர அனுமதிக்கிறான் மகாதேவ். அதுவரை உற்சாகமாக வலயவந்த முன்னிபாய், கண்ணீருடன் பேசும் நீண்ட வசனம் பொருள் தெரியாவிட்டாலும் புரிந்து கொள்ளமுடிந்தது. தானும் மனிதப்பிறவிதானே என தன் தரப்பு நியாயத்தை கேட்கும் முன்னிபாய்க்கு உதவுகிறான் மகாதேவ். அவன் எழுதித் தரும் மனுவின் பயனால் முன்னிபாய்க்கு போலிஸ் பாதுகாப்பும் கிடைக்கிறது. இதில் குறிப்பிட வேண்டியது, ராம் சிங் தனது மனுவிற்கு கைநாட்டு வைக்கிறார். முன்னிபாய் தனது மனுவில் கையெழுத்து போடுகிறார். அழகான கௌரவம்!


தேர்தலிலும் பல வோட்டு வித்தியாசத்தில் வெற்றி பெருகிறார் நம் முன்னிபாய்... ஆனால், சில நாட்களிலேயே முன்னிபாய் ராம்சிங்கால் கொல்லப்படுகிறார். படத்தில் இறுதியில், மகாதேவ் எழுத்தாளனாக தன் அனுபவங்களை வைத்து நாவலாக இவற்றை எழுதியுள்ளான் என்று தெரிகிறது. மேலும், நாவலில் மட்டுமே முன்னிபாய் கொல்லப்படுகிறார். நிஜத்தில் M.L.A. ஆகி தன் பணியைத் தொடர்கிறார்.


திருநங்கைகள் ஏற்றம் பெருவதில் உள்ள நிதர்சன தடைகளை காட்டியிருந்தாலும், படம் முடிக்கும் போது விளிம்புகளுக்கும் மனிதாபிமானிகளுக்கும் நம்பிக்கை தரும்படியும் திரைக்கதையை புத்திசாலித்தனமாக அமைத்துள்ளார் ஷியாம் பெனகல்.

நன்றி!! என் சார்பிலும், ஒட்டுமொத்த திருநங்கைகள் சார்பிலும்!!

11 நண்பர்கள் புன்னகையை பதித்துள்ளனர்:

நாமக்கல் சிபி said...

எனது நன்றியையும் சேர்த்துக் கொள்ளுங்கள் வித்யா!

Nimal said...

நல்ல விமர்சனம்...

படத்தை பார்க்க முயற்ச்சிக்கிறேன்.

superlinks said...

hai nvisit my blog.

mathiyazhagan said...

thamizh thiraiyulagam thirunangaigalai parigaasamaagavae kaattugindrana! thirundha vaendum thamizh padaippaligal.

வித்தகன் said...

உண்மையைச் சொல்லப் போனால்..பால்ய வயதில் திருநங்கைகளைப் பற்றி சரியான அபிப்ராயம் எனக்கு இருந்ததில்லை. என்னைச் சுற்றி இருந்த அனைவருமே திருநங்கைகளைப் பற்றி தவறாகவே பேசினார்கள். நான் வளர வளரவே அவர்களைப் பற்றி புரிந்துக் கொண்டேன். பிறப்பில் குறையிருப்பினும் உங்கள் வளர்ப்பில் குறையில்லை என்பதை உங்கள் எழுத்தின் ஆழத்தில் இருந்தே தெரிகிறது. உண்மையாகவே சொல்கிறேன், உங்கள் மீது அநுதாபமில்லாத அபிமானம் என்னுள் பிறந்து விட்டது.தமிழால் இணைந்த நாம் இனி நண்பர்கள். தயச்செய்து என் இணைய வீட்டிற்கும் நீங்கள் வரவேண்டுமென, தாழ்மையுடன் வேண்டுகிறேன். -சு.அரசு
http://vithaganin-ulagam.blogspot.com/

வால்பையன் said...

நன்றி விமர்சனதிற்க்கு
உங்கள் பதிவுகளை பார்ப்பதே அபூர்வமாக இருக்கிறதே ஏன்?

butterfly Surya said...

படத்தை பார்க்க வேண்டும் என்ற ஆவலை ஏற்படுத்தி விட்டீர்கள்..

நன்றி..

வாழ்த்துக்கள்

சூர்யா
butterflysurya@gmail.com

kalagam said...

thozhar,we are looking for ur comments on
article THIRUNANGAI

at

http://kalagam.wordpress.com/

கோவி.கண்ணன் said...

சகோதரி வித்யா,

திருநங்கைகள் குறித்த விழிப்புணர்வில் நல்ல முன்னேற்றம் !

திருநங்கைகள் பற்றிய ஒரு கட்டுரையும், ஒரு நூல் விமர்சனமும் எழுதி இருக்கிறேன். படித்து பார்த்து கருத்து சொல்லுங்கள்

அபி அப்பா said...

கண்டிப்பா பார்க்க முயற்சி செய்கிறேன். என்னம்மா கண்னு, நெம்ப நாளா எழுதவே காணுமே! எழுதினா என்ன?

Ravi said...

Dear Vidya:

I was a little surprised that in your review of the movie "Welcome to Sajjanpur" there is no reference (or comparison) to Shabnam Mausi, a 2005 movie based on the real-life story of Shabnam Mausi Bano, a transgender who was an MLA of Madya Pradesh from 1998 to 2003. This real-life story seems to have strong parallels with "Sajjanpur" in that the protagonists in both wanted to be politicians and both succeeded in getting elected to an office at the state level. But the real-life story has a good ending. Shabnam successfully completed her term in office and is continuing to inspire many through activism and social service.

The narrative in Shabnam Mausi was not great, but it is inspirational as a true story. Probably Shyam Benegal's movie is of a better artistic quality. But there is no denying that Shabnam is a heart-warming movie and is a truly pioneering attempt.

With regards,
Ravi