கேரளா - கோடைகால குறுகிய வேலைவாய்ப்பு

கடந்த ஏப்ரல் 08ல் நடந்த "பல் சான்றீரே" மற்றும் "யாது நம் ஊர்?" நாடக நிகழ்விற்கு வந்திருந்த நண்பர்கள் அனைவருக்கும் நன்றி!.






நேரும் வர வாய்ப்பில்லாத நண்பர்களுக்காக நிகழ்வின் புகைப்படங்களை இங்கே சொடுக்கி காணலாம்.

எனது மடிக்கணினி உதவிக்காக இதுவரை கிடைக்க பெற்ற தொகை, இரண்டாயிரம் ரூபாய். உதவிய நண்பர்கள் தண்டோரா, சாலமோன் மற்றும் நிகழ்விற்கு வந்து தனது பங்களிப்பை நேரில் தந்துதவிய நண்பர் கண்பத் அவர்களுக்கும் மனமார்ந்த நன்றி!. (நண்பர் கண்பத் அவர்கள் என்னை மன்னிக்கவும். அடுத்த நாடகத்திற்கான முஸ்தீபில் இருந்ததால் என்னால் சரியாக பேசமுடியவில்லை.)

அமீரகத்திலிருந்து, பாலராஜன் கீதா அவர்கள் எனக்கு தமது சென்னை பயன்பாட்டிற்கென வைத்திருந்த மடிக்கணினியை தந்து உதவியுள்ளார். அதை சர்வீஸ் செய்து தர உதவிவரும் நண்பர் உண்மைத் தமிழனுக்கும், விவேக் அவர்களுக்கும் நன்றி!



இன்று மாலை நான் கேரளாவிற்கு தற்காலிக பணிகாரணமாக செல்கிறேன். திரும்பி வர ஒருமாதத்திற்கு மேல் ஆகும்.


அதற்கும் வேண்டிய தொகை சேர்ந்தால் புது கணினியில் உங்களுக்கும் பதிவிடுகிறேன். அல்லது திரு. பாலராஜன் கீதா அவர்களின் உபயத்தில் உள்ள மடிக்கணினியில் சில மாற்றங்கள் செய்து உங்களை தொடர்புகொள்கிறென்.

தங்களின் மேலான அன்பிற்கும், ஆதரவிற்கும் மிக்க நன்றி நண்பர்களே.

கொசுறு : கிட்டதட்ட ஐந்து வருடங்களுக்கு பிறகு என்ன்னுடன் சில நாட்களை கழிக்க, என்னைத் தேடி என் குடும்பத்தார் சென்னை வருகிறார்கள். என்ற மகிழ்ச்சியான செய்தியை உங்களுடன் பகிர்ந்து கொள்ளவதில் மேலும் மகிழ்ச்சி கொள்கிறேன்.

1 நண்பர்கள் புன்னகையை பதித்துள்ளனர்:

Ganpat said...

வித்யா,
உங்கள் நாடகம் மிக அருமையாக இருந்தது.முன்பணி காரணமாக நான் இரண்டாவது நாடகத்திற்கு இருக்க முடியவில்லை.மன்னிக்கவும்.
அனைவரின் நடிப்பும் (குறிப்பாக அஸ்வினி மற்றும் உங்கள் நடிப்பு) அற்புதம்.மங்கை அவர்களை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.அடுத்த முறை சென்னையில் அரங்கேறும்போது தெரியப்படுத்துங்கள்.

வித்யா நீங்கள் இனிமேல் வாழ்க்கையில் எந்த கஷ்டமும் படக்கூடாது.உங்கள் நல்ல வேளை ஆரம்பித்துவிட்டது.உங்கள் குடும்பத்தார் உங்களைப்பார்க்க வருவது ஒரு ஆரம்பமே..மிகவும் திறமைசாலி மற்றும் புத்திசாலியான நீங்கள் மிகப்பெரிய வெற்றி பெறப்போவது உறுதி.எப்பொழுதும் சந்தோஷமாக இருங்கள்.
வாழ்க வளர்க
அன்புடன்,
கண்பத்