ஓநாயும் ஆட்டுக்குட்டியும் தேவதையும்

இது ஓநாயும் ஆட்டுக்குட்டியும் படத்தை விமர்சனம் அல்ல... காரணம் ஒன்று... இயக்குநர் மிஷ்கின் எனக்கு சினிமா குரு.. அவருடன் “நந்தலாலா” என்ற ஒரு முழு படத்தில் பணியாற்றிய அனுபவத்திற்குப்பிறகு என்னால் அவர்து படங்களை அப்பணியாற்றிய அனுபத்துடனே அணுக முடிகிறது. உதாரணத்திற்கு.. ஒவ்வொரு காட்சியை பார்க்கும் போதும்.. இதை அவர் எந்த பார்வையில்/நோக்கத்தில் செய்திருப்பார்.. இக்காட்சியை படம்பிடிக்கையில் படப்பிடிப்பு தளத்தில் என்ன நிகழ்ந்திருக்கும்.., எப்படி உழைத்திருப்பார்/உழைப்பை கொண்டு வந்திருப்பார்... என்ற தளத்திலேயே அல்லது இம்முறை நான் அந்த படிப்பிடிப்பு தளத்தில் இல்லையே என்றவாறு என் சிந்தை வேறு எங்கோ சென்று விடுகிறது.. அது வேறொரு உணர்வு... காரணம் இரண்டு.. அவர் என் குரு, குருவை நேர்மறையாகவோ/எதிர்மறையாகவோ விமர்சிக்கும் பக்கும்/தைரியம்/போதுமை எனக்கில்லை... காரணம் மூன்று ( முக்கியமானதும்..) இப்படத்தின் பாரதி என்ற தேவதையின் (ஏஞ்ஜல் கிளாடி) கதாபாத்திரம்... நூறாண்டு கண்ட இந்திய சினிமாவின் அங்கமான 80 ஆண்டு கண்ட தமிழ் சினிமாவின் வரலாற்றில் ஒரு திருநங்கையை மிக குறிப்பாக திருநங்கை என்று எங்குமே குறிப்பிடாமல் பாரதி(கண்ட பெண்ணாக)-ஆக மட்டுமே காட்டியதோடு, இவ்வனத்தின் வன விலங்குகளுக்கிடையே... வன தேவதையாக தலைப்பிலும் அவள் தேவதையாய் அவள் பெயரைப்போல, அவளைப் போலவே காட்டியது.. எனது (சிறுவனாக அறியப்பட்ட)சிறிமி காலம் தொட்டு ஒவ்வொரு முறையும் குடும்பத்துடன் படம் பார்க்கும் போதெல்லாம் திருநங்கைகள் குறித்த அபத்த/ஆபாத்தான காட்சிகள் வரும்போதெல்லாம் என்னுள்/பலர் முன் சிறுத்துப்போய் கூனிக்குறுகி நின்றவள் நான்... முதன்முறையாக ஒரு திருநங்கையாக ஒரு திரைப்படத்தை, திரையரங்கில் பார்க்க்கும் போது.. என் பாலிய்ல் அடையாளம் குறித்த சிறுமை/பெருமை இன்று கெத்தாக பார்த்த பாத்திரமிது.. “என்ன... இதுக்கு முன்னாடி சில நல்ல படம் அந்த மாதிரி வந்திருக்கே... நான் கடவுள்., தெனாவெட்டு..” இல்லை.. இல்ல்லை... இல்ல்ல்ல்லை... அதிலெல்லாம் ஒரு செயற்கைதனம் அல்லது திருநங்கைகள் குறித்த செயற்கை புரிதல் தொற்றிக்கொண்டே இருந்தது... முதல் முறையாக... ஒரு திருநங்கையை வலிந்து திணிக்காமல்ல்.. எந்த வசனமோ எதுமோ திருநங்கை என்று வலிந்து சொல்லாமல் அவளை ஒரு பெண்ணாக/மனுஷியாக மட்டுமே கூடுதலாக தேவதையாக அணுகிய திரைக்கதையை தமிழ்சினிமால் நான் உணர்ந்து முதல்முறையாக இப்போதுதான்...
எங்கள் தேவதை ஏஞ்ஜல் கிளாடியும் தன் பொறுப்புணர்ந்து வெகு சரியாக பயன்படுத்தியதில் மென்மேலும் பெருமை கொள்கிறேன்... Love you Glady and my (Wolf) Guruji... இப்படம் பொருளாதாரரீதியாகவும், விமர்சன்ரீதியாகவும் வெற்றிகொள்ளவும்... இத்திரைப்படம் ஒரு நல்ல ஆரம்பமாக இருந்து.., ஒரு trendsetter'ஆக இருக்க வேண்டுமென கூடுதல் பேராசை கொள்கிறேன்..

1 நண்பர்கள் புன்னகையை பதித்துள்ளனர்:

கரந்தை ஜெயக்குமார் said...

நான் அதிகமாக திரைப்படம் பார்க்காதவன். ஆனாலும் ஓநாயும் ஆட்டக் குட்டியும் திரைப்படம் சென்றேன். அருமையான படம். படம் முழுதும் துப்பாக்கி தெரிந்தாலும், அதிகமாய் வெளிப்படுவது மனிதம்.