மதுமிதாவின் ஆவணத்திற்கு

இந்தாங்க மதுமிதா நீங்க கேட்ட தகவல்கள், ஏற்கனவே உங்களுடைய ஆவணத்தொகுப்பிற்காக நிறைய பேர் குடுத்திருந்ததைப் பார்த்திருக்கேன்... என்னையும் லிஸ்ட்டில் சேர்த்துக்கிட்டதுக்கு நன்றிங்க... தொகுப்பு சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்...

வலைப்பதிவர் பெயர்: லிவிங் ஸ்மைல் வித்யா

வலைப்பூ பெயர் : ஸ்மைல் பக்கம்

உர்ல் / சுட்டி : http://livingsmile.blogspot.com/

ஊர்:
பிறந்த ஊர் திருச்சி; இடையில் கொஞ்ச காலம் புனே (ஆனால், புனேவைத்தான் சொந்த ஊராக பாவிக்கிறேன்)

நாடு: இந்தியா

வலைப்பூ அறிமுகம் செய்தவர்: பாலபாரதி

முதல் பதிவு ஆரம்பித்த நாள்,வருடம் :
மே 18 வியாழன் 2006

இது எத்தனையாவது பதிவு: இதோடு 15

இப்பதிவின் உர்ல் / சுட்டி : http://livingsmile.blogspot.com/2006/07/blog-post_17.html


வலைப்பூ ஏன் ஆரம்பித்தீர்கள்: என்னைப் போன்ற திருநங்கைகளாலும் பொதுத் தளத்தில் இயங்க முடியும் என்பதை என்னால் முடிந்த வரை எல்லா இடத்திலும் நிரூபித்து வருகிறேன்.. அந்த விதத்தில் கணினியிலும் வலையில் உலவ வேண்டும் என் விருப்பமாய் இருந்தது. அதற்கு வலைப்பூ உதவியாக உள்ளது.. வலைப்பூ மூலம் எங்களைக் குறித்த பிரக்ஞ்சை அனைவருக்கும் கூடிய மட்டும் வலைப் பதிவாளர்களாலும், அவர்களின் மூலமாக பிறருக்கும் தெரிய வரவேண்டும்

சந்தித்த அனுபவங்கள்: எனது வலைப் பதிவை தொடர்ந்து பார்த்து வந்தால் தெரியும்; கடை கேட்டல் (பிச்சை), விபச்சாரம், வியாபாரம், வேலை, இவற்றினூடே இலக்கியம், இலக்கிய போலிகள் மற்றும் முற்போக்கு முத்தன்னாக்களுனுடன் கொஞ்சலாக நட்பு, கொஞ்சம் போல கவிதை என தற்போது எழுத்திலும் கொஞ்சம் ஆர்வம் வரத் தொடங்கியுள்ளது...

பெற்ற நண்பர்கள்: பொதுவாக selectivaஆக ஆனால் நிறைய நண்பர்களுண்டு.. வலைப் பதிவின் மூலம்,
பாலபாரதி,
ராமசந்திரன் உஷா,
பொடிச்சி,
மதுமிதா,
யாழிசைச் செல்வன்,
ராகவன்,
மஞ்சூர் ராசா,
குமரன்,
துபாய் ராசா,
ஜோ,
உங்கள் நண்பன்,
இட்லிவடை,
செந்தழல் ரவி,
நாமக்கல் சிபி,
ராம்,,
யாத்ரீகன்,
செந்தில் குமார்,
வானவராயன்,
ஜோஸப்,
நவீன் ப்ரகாஷ்,
அருள் குமார்,
பொன்ஸ்,
துளசி கோபால்,
சேதுக்கரசி,
சாரா,
தேன் துளி, இன்னும் இன்னும் பலருண்டு...


கற்றவை:
கையளவு....

எழுத்தில் கிடைத்த சுதந்திரம்: சுதந்திரம் எனது இயல்பு எழுத்திலும் அது தொடர்கிறது..

இனி செய்ய நினைப்பவை: நல்ல கவிதைகள் தரவேண்டும், என் அனுபவங்களை போலியற்ற நல்ல எழுத்தாக அனைத்து தரப்பிற்கும் கொண்டு செல்லவேண்டும்..

உங்களைப் பற்றிய முழுமையான குறிப்பு: திருநங்கை, பிறந்து வளர்ந்தது திருச்சியில், ஜீவிப்பது மதுரையில்... நண்பர்கள் நீங்கலாக குறிப்பிட்ட எந்த உறவுப் புலமும் அற்றவள்.., நம்பிக்கையுடன் சமூகத்தில் மாற்றங்களை எதிர்பார்த்து வாழும் பத்தோடு பதினொன்று நான்....

இன்னும் நீங்கள் சொல்ல நினைக்கும் ஒன்றைச் சேர்க்கலாம்: தொடர்ந்து எனக்கும், என் வாழ்க்கைக்குமான போராட்டத்தில் நான் தளர்ந்து விடாமல் இருக்க உதவும் நண்பர்களுக்கும், வலைப்பதிவில் எனக்கு தொடர்ந்து ஊக்கமும், ஆதரவும் தரும் நண்பர்களுக்கும், குறிப்பாக தமிழ் மணத்திற்கும் நன்றிகள்... தமிழ் மணம் மேலும் சிறப்பான பணியாற்ற வாழ்த்துக்கள்...

5 நண்பர்கள் புன்னகையை பதித்துள்ளனர்:

செந்தில் குமரன் said...

என்னையும் நண்பனாக மதித்து உங்கள் பதிவில் குறிப்பிட்டது மிகவும் நெகிழ்ச்சியாக இருக்கிறது நன்றி. வளர் சிதை மாற்றம் என்று சொல்லுவார்கள். மனித இனத்தில் ஒரு பிரிவினரான திருநங்கைகளைப் பற்றி என் எண்ணங்களை மாற்றி அமைத்த வளர் சிதை மாற்றத்தை என் வாழ்க்கையில் உண்டாக்கியது நீங்கள்தான்.

நன்மனம் said...

வாழ்த்துக்கள். குங்குமம் பேட்டிக்கு.

உங்கள் நண்பன் said...

குங்குமம் மற்றும் அவள் விகடன் போன்ற பத்திக்கைகளில் உங்களின் போட்டி வந்ததாக அறிந்தேன், மகிழ்ச்சி வாழ்த்துக்கள் தோழியே...

உங்களது நண்பர்களின் பட்டியளில் எனது பெயர் கண்டு , நண்பர் குமரன் கூறியது போல் நானும் மகிழ்ச்சியாகவும் நெகிழ்ச்சியாகவும் உணர்ந்தேன்,

நன்றி...


அன்புடன்...
சரவணன்.

நிலவு நண்பன் said...

பாலபாரதி,
ராமசந்திரன் உஷா,
பொடிச்சி,
மதுமிதா,
யாழிசைச் செல்வன்,
ராகவன்,
மஞ்சூர் ராசா,
குமரன்,
துபாய் ராசா,
ஜோ,
உங்கள் நண்பன்,
இட்லிவடை,
செந்தழல் ரவி,
நாமக்கல் சிபி,
ராம்,,
யாத்ரீகன்,
செந்தில் குமார்,
வானவராயன்,
ஜோஸப்,
நவீன் ப்ரகாஷ்,
அருள் குமார்,
பொன்ஸ்,
துளசி கோபால்,
சேதுக்கரசி,
சாரா,
தேன் துளி,

அப்ப என்னையெல்லாம் நண்பர்கள் வட்டாரத்தில் சேர்துக்க மாட்டீங்களாக்கும்..போங்கக்கா..உங்க கூட டு

Venkataramani said...

தேன்கூடு போட்டியில் பரிசு பெற்றதற்கு வாழ்த்துக்கள்!!