நான் பலமுறை கூறியிருப்பது போல எனக்கு எனது அலுவலக வேலையே சரியாக இருப்பதால், பதிவு போடுவதுவதற்கே போதுமான நேரமிருப்பதில்லை. இந்நிலையில் என்னால் சக போட்டியாளர்களின் பதிவையும் படிக்க இயலவில்லை..
போட்டி கவிதையை பதிவிட்டதோடு சரி பிறகு வெல்வோமா, மாட்டோமா என்ற சிந்தனையும் கிடையாது... உண்மையில் இந்த கவிதை தேர்வானதே நண்பர்கள் வாழ்த்திய பிறகு தான் எனக்கு தெரிய வந்தது... மற்ற படைப்புகளை படிக்காத நிலையில், எனது கவிதை இரண்டாவது பரிசு பெற்றா சரியா என்பது எனக்கு தெரியவில்லை...
இப்படியிருக்க, தோழி நிலா அவர்களின் போட்டிப் பதிவில் இடப்பட்ட பின்னூட்டம் ஒன்றில் நண்பர் ஜெயராமனின் பின்வரும் இந்த வரிகளை படிக்க நேர்ந்தது.
// பரிசுகள் மூன்றும் மூன்று சுவையான பதிவுகளுக்கு போய் இருக்கிறது. முக்கனிகள் போல் மூன்று பதிவுகளும் இருக்கின்றன. ஒருத்தர் கவிதை சிம்பதி ஓட்டில பரிசு தட்டிவிட்டது என்று நினைக்கிறேன். (அதற்காக குறை என்று தவறாக நினைக்க வேண்டாம்) //
// மற்ற பலரின் கதைகளை படிக்கும் போதே எழவு வீட்டு களைதான் அடித்தது. //
// மற்ற பல கதைகளில் கதாபாத்திரங்கள் அந்த கதாசிரியர்களின் மன விகாரங்களை போலவே குழம்பி போய் இருந்தார்கள். //
நேர்மையான அவரின் இந்த பதிவு கவனிக்கத்தக்கதே.. ஏனெனில், சிம்பதியை நாங்கள் விரும்புவதில்லை அது எங்களுக்கு தேவையுமில்லை.. எங்கள் மீதான கேலி கிண்டல் நீங்கி, சமூகத்தின் எல்லா மட்டத்திலும் எங்களுக்கு சமஉரிமையும், வாய்ப்பும் வழங்கப்பட வேண்டும் என்பதுதான் எங்களின் நோக்கம்... அந்த அடிப்படையில், பொது மக்களுக்கு எங்கள் பிரச்சனை புரிய வேண்டுமென்பதற்காகத்தான் கிடைக்கும் வாய்ப்பாக blogக்கி கொண்டும், தொடர்ந்து பதிவிட்டும் வருகிறேன்..
ஆக, அவ்வாறு சம வாய்ப்பு கிடைக்கும் பட்சத்தில் வெற்றியோ/தோழ்வியோ அவரவர் தனித்தனி திறமையை சார்ந்தது என்பதில் எனக்கு எந்த மாற்றுக்கருத்தும் கிடையாது...
எனவே, நண்பர்கள் யாரேனும் வெறும் சிம்பத்தியால் எனக்கு வாக்களித்திருக்கும் பட்சத்தில் தங்களின் வாக்குகளை பின்வாங்கிக் கொள்ளுமாறும், அல்லது எங்கள் மீதான அனுதாபத்தைத் துடைத்து இயல்பான உங்கள் பின்னூட்டங்களை இடுமாறு கேட்டுக்கொள்கிறேன்..
தேன்கூடு ஆசிரியரும் எனது இப்பதிவை ஏற்று பரிசினை மறுபரிசீலனை செய்யமாறு கேட்டுக் கொள்கிறேன்..
ஆனால், // மற்ற பல கதைகளில் கதாபாத்திரங்கள் அந்த கதாசிரியர்களின் மன விகாரங்களை போலவே குழம்பி போய் இருந்தார்கள். // என்ற இந்த வரியை என்னால் ஏற்றுக் கொள்ளவே முடியாது. ஆம்.., விகாரமான மனம் எங்களிடமில்லை நண்பர்களே எங்களை தள்ளி வைத்து கொண்டாடும் கயமை குணம் கொண்ட சமூகம் தான் முழுக்க முழுக்க விகாரமானது..
நோகாமல் நொங்கு தின்று பழகிய இவர்களைப் பொன்றவர்களுக்கு நாங்களும், எங்கள் கஷ்டங்களும், அதை வெளிப்படையாக சொல்லும் விதமும் விகாரமாக பட்டால் sorry to say விகாரம் உங்களிடம்தான் உள்ளது..
பரிசு வேண்டாம் - தேன்கூடு கவனத்திற்கு
Subscribe to:
Post Comments (Atom)
38 நண்பர்கள் புன்னகையை பதித்துள்ளனர்:
pls vidhya avari kandu kollatheergal..ungalil andha kavidhi parisukkiryadhey..
nanum kuda ungalukku irandaam parisu kidaiththvudan, avari polave ninaiththen..aannaal mendum ungalin andha kavidhaiyai padiththen..
nichyamaga solgirane ..adhu parisukuriyadhey..earkenvaey niraya pirachinanigalai numma valaipadhivaalargal pesik kondirukiraargal..indha samyathil idhu veraya?
silasamayangalil andha karuththia ittavar avar pirapalamaaga idhai oru vaaybaga payanpaduththi kolvar..
en korikkaigalai earpeergal en numbugirane..nandri
வித்யா அக்கா,
சிம்பதிக்காக விழிந்திருந்தால் அனைத்து ஓட்டுக்களும் உங்களுக்கு விழிந்திருக்கும்...விழுந்த ஓட்டுக்கள் அனைத்தும் உங்கள் கவிதைக்கே!!!
நான் பொதுவாக கவிதை எல்லாம் படிப்பது இல்லை. பரிசு பெற்றவுடன் உங்கள் கவிதையை படித்து முதல் பரிசை இது ஏன் பெறவில்லை என்று யோசித்தேன். உங்கள் கவிதையை படித்து உண்மையில் எனக்கு வலித்தது.
ஒரு சிலருக்கு விக்ரமன் படம் (நிழல் உலகம்) பிடிக்கும்...ஒரு சிலருக்கு செல்வராகவன் படம் (நிஜ உலகம்) பிடிக்கும். உங்கள் கவிதை இரண்டாம் வகையை சார்ந்தது. உண்மை வலிக்கத்தான் செய்கிறது.
லிவிங் ஸ்மைல் வித்யா!
எவ்வளவோ மக்களை சந்தித்துள்ளீர், போராடி வெற்றி பெற்றுள்ளீர், அது போல் மேன்மேலும் வெற்றி பெற வாழ்த்துக்கள்.
இம்மாதிரி பின்னூட்டம் இட்டவர்க்கு கண்டனம் என்று கூறி தான் எனது கண்டனத்தை தெரிவித்து கொள்ள வேண்டும் என்பது இல்லை அதை ஒதுக்கி கூட கண்டனத்தை தெரிவித்துக்கொள்ளலாம்.
வித்யா அவர்களுக்கு,
நான் நிலா அவர்களின் பதிவில் இதற்கு விளக்கம் அளித்து 'யார் மனதையும் புண்படுத்துமானால் என்னை மன்னியுங்கள்' என்று சொல்லியிருந்தேன்.
நீங்கள் இதை ஏற்று என்னை தவறாக நினைக்காமல் இருக்க வேண்டும்.
நான் கதைகளை பற்றி கூறியது தங்களுக்கு சற்றும் பொருந்தாது. அதை நீங்கள் மனவிகாரம் என்றெல்லாம் உங்கள் மீது ஏற்றி என்னை குற்றங்சாட்டுவது சரியல்ல.
என் கருத்துக்கள் தங்களுக்கு மன வருத்தத்தை தருமானால் நான் மனதார வருந்துகிறேன். இ தை இன்னும் பெரிது படுத்த வேண்டாம்
//இம்மாதிரி பின்னூட்டம் இட்டவர்க்கு கண்டனம் என்று கூறி தான் எனது கண்டனத்தை தெரிவித்து கொள்ள வேண்டும் என்பது இல்லை அதை ஒதுக்கி கூட கண்டனத்தை தெரிவித்துக்கொள்ளலாம்//
நன்மனம்,
இதுக்கு என்னய்யா அர்த்தம்? தலைவலிக்குது தெளிவா சொல்லுமய்யா...
Vaazhum Punagai Vidhya Avargaluku,
Ungal Kavithaikku alikkappatta vaakugal anuthabaththin adippadiyil alla endre naan ninaikkiren.
Maranam patriya oru marubatta konamum (athavathu anaivarum udaluku erpadum maranam patri ezhuthi iruntha velaiyil, ullathirkum, unarvugalukum erpadum patri neengal ezhuthiyiruntheergal) , veeriyam mikka vaarthai pirayogangalumthan ennai vakkalika thoondina.
antha adipadaiyilthan thangalukku enbathaivida thangal kavithaikku endruthan solla vendum, vaakugal kidaithu irandam idathirku serthullathu.
matrabadi yaro oriruvar eethavathu koruvathu patriyellam kavalai kola vendam.
Ungal intha pathivai parthu adhirnthu poi vitten.
Nandri.
Natpudan,
Namakal Shibi.
நண்பர்களே இந்தப் பதிவில் நான் முக்கிய மானதாக பதிவு செய்வது
1. நண்பர் ஜெயராமன் மீது எந்த வருத்தமும் இல்லை..
2. அனுதாபமும், அனுதாபம் சார்ந்த ஓட்டாக இருந்தால் அதுவும் தேவையல்ல. ஆனால், தகுதியானது என்ற அடிப்படையில் இடப்பட்ட வாக்குகளை நான் மகிழ்ச்சியோடு வரவேற்கிறேன்.
3. எனது மனோபாவம் சமவாய்ப்பு சார்ந்தது மட்டுமேயன்றி.. வெற்றி சார்ந்ததன்று...
நன்றி...
"மரணம்" தலைப்பு போட்டி சூடாய் போய்கொண்டு இருக்கிறது. வித்யாவின் கவிதையை நன்றாக இருக்கிறது என்று சொல்ல நா எழவில்லை. நிஜத்தின் கோரமான முகம் நம்மை தாக்குகிறது. என் கணிப்பில் அதற்கு முதல் பரிசு,//
வித்யா, இதை என் பதிவில் நான் போட்டது, அதை ஒருமுறை படித்துவிடுங்கள்.
வித்யா, நிலாவின் பதிவில் ஜயராமன் சொன்னதைப் பார்த்துவிட்டு இதை எழுதுகிறேன். சில சமயங்களில்
சில சொற்கள் சாதாரணமாய் சொல்வதாய், நகைச்சுவையாய் சொல்வதாய் நினைத்து எழுதப் போய்
பொருள் தவறாய் போய்விடும் சாத்தியங்கள், இணையத்தில் எனக்கு பலமுறை நடந்துள்ளது. இதைவிட,
வாழ்க்கையில் பல சோதனைகளையும் வேதனைகளையும் தாண்டி வந்த உங்களுக்கு இந்த
வார்த்தைகள் எல்லாம் தூசு.
வாழ்க்கையில் சாதனைகள் என்று நினைத்து பலர் புகழும்பொழுது, சில எதிர்வினைகளும் வரத்தான்
செய்யும். இவை வெற்றியின் இன்னொரு பக்கம். இரண்டையும் ஓரே மாதிரி பாவித்தால்,
எதுவும் நம்மை பாதிக்காது என்பது என் கருத்து. சில சமயங்களில் இத்தகைய சொல்லடிகள் நம்மை
கொஞ்சம் நிதானப்படுத்திக்கொள்ளவும் செய்யும். பாதை வகுத்த பின்பு பயந்தென்ன லாபம், பயணம்
நடத்துவிடு, இலக்கை நோக்கி!
சந்தர்ப்பங்கள் வாசல் தேடி வரும்பொழுது உங்களை சுறுக்கிக் கொள்ளாதீர்கள். நேரமில்லை என்றால்
நான் ஒத்துக்கொள்கிறேன். ஆனால் மனமிருந்தால் நேரத்தை உருவாக்கிக் கொள்ளலாம் என்பதற்கு இன்று வெளியே செல்லும் அவசரத்தில் இதை உங்களுக்கு அனுப்புகிறேன் :-)
லிவிங் ஸ்மைல்,
என்னங்க இது? ஒரே ஒருவரின் தனிப்பட்ட கருத்துக்கு எதுக்குங்க தனிப் பதிவு போட்டு பரிசு வேண்டாம்னு சொல்லிகிட்டு...
உங்களுக்கு முதல் இடம் வரும்னு நினைச்சேங்க.. நான் மட்டும் இல்லை, உஷா மாதிரியே நிறைய பேர் அப்படித் தான் நினைத்துக் கொண்டிருந்தோம். சனிக்கிழமையா இல்லைன்னா இந்தப் பதிவுக்கே எல்லாம் வந்து சொல்லி இருப்பாங்க :)
ஓட்டு போட்ட நாங்க உரிமையா சொல்றோம், சீக்கிரம் தமிழோவியத்தில் வந்து எழுதுங்க.. இந்த ஒரு வரி அவதூறுக்கு எல்லாம் கவலைப் படாம வாங்க..
சொல்லடி சாதரணமானது! அதை பெரிதுபடுத்தக்கூடாது என்பது என் கருத்து! பரிசு உங்கள் கவிதைக்கு தான் ஸ்மைல்!!
இதை வேண்டாம் என்று சொல்லுவது தேன்கூட்டுக்குத் தான் இழுக்கு, அதனால் ஒருவருடைய தவறான கருத்து ஒட்டு மொத்த சமுதாய கருத்தாக எடுக்க வேண்டாம் என்று கூற ஆசைப்படுகிறேன். இந்த பரிசு உங்களுக்கும் உங்கள் படைப்புக்கும் கிடைத்த வெற்றி அதை கொண்டாடுங்கள்! உங்கள் படைப்புக்கள் மேலும் வளர வாழ்த்துக்கள்!!
வித்யா,
நான் கௌதமுக்கு எழுதிய பின்னூட்டம் இங்கே:
//வேறுபடுவதற்கு மன்னிக்கவும். தேவை இல்லாமல் ஒரு விஷயத்தைப் பெரிதாக்குகிறோம் என நினைக்கிறேன்.
ஜயராமன் எழுதியது சரியா தவறா என்ற பிரச்சனைக்கே நான் போகவில்லை. நீங்கள் இதனைப் பெரிது படுத்தாமல் விட்டிருந்தால் எனது பதிவில் ஜயராமனின் பின்னூட்டம் கவனிக்கப் படாமலேயே போயிருக்கும்; இப்போது பாருங்கள், அதனைப் படிக்காத பலரும் இதனைப் படித்து காயம்பட்டுப் போனார்கள். இது எப்படி இருக்கிறதென்றால் ஒரு சிறிய அறைக்குள் ஒருவர் சிலரை விமரிசித்ததை ப்ரஸ் கான்ஃபரஸ் போட்டு சொல்வது போலாகிவிட்டது.
இதில் ஜயராமனுக்கு மட்டுமல்ல - காயப்பட்ட எல்லோருக்குமே மனவேதனை.
ஏற்கெனவே தமிழ்மணம் ரணகளமாக இருக்கிறது. இதனை இத்துடன் விட்டுவிடலாமே! //
லிவிங் ஸ்மைல் வித்யா!
லிவிங் ஸ்மைல் வித்யா!
பரிசு வெளியிடப்பட்ட நாளில் வென்றேனே என்று மகிழ்ச்சியாய் ஒரு பதிவை போட்டிங்க அது சரி .
அடுத்த நாள் ஒரு பின்னூட்டத்தை வச்சி பரிசு வேணாம்னு சொல்றதா?
அவ்வளவுதானா நீங்க?
இன்னும் எவ்வளவோ இருக்குங்க. சீக்கிரம் தமிழோவியம் பக்கம் வந்து எழுதுங்க.
அய்யா ஜெயராமன்,
//நான் நிலா அவர்களின் பதிவில் இதற்கு விளக்கம் அளித்து 'யார் மனதையும் புண்படுத்துமானால் என்னை மன்னியுங்கள்' என்று சொல்லியிருந்தேன்.//
இன்னும் எத்தனை காலத்திற்கு சொல்றதையும் சொல்லிவிட்டு மன்னிப்பு கேப்பிங்க?. தவிர இங்க எழுதும் யாவரும் அறிமுக படைப்பாளிகளே அதையும் மனசுல வச்சிகிட்டு விமர்சனத்தை கொடுத்திருக்கலாம். சுப்புடு ரேஞ்சு விமர்சனமெல்லாம் இங்கே மிகையைபோன்றுதான்.
சிம்பதிக்காக ஓட்டு விழுந்ததுன்னு சொல்றது தப்பு
வித்யாவின் சிம்பதிக்கு இல்லை இந்த பரிசு அவரின் கவிதைக்குதான்.
வித்யா,
நீங்கள்,
எல்லாம் தாண்டிய சன்யாசி இல்லை.
சின்னப் பெண்தானே.
வருத்தப் படாதீர்கள்.
நிறைய எழுதி இன்னும் பல வெற்றிகளைச் சந்திக்க வேண்டும். வாழ்த்துகள்.
வித்யா,
நான் செலுத்திய ஓட்டு உங்கள் கவிதையின் வீரியத்திற்காகத்தான். எனது ஓட்டை உங்கள் படைப்புக்கும் மட்டுமே அளித்திருந்தேன். எனக்குள் அத்துணை அதிர்வை ஏற்படுத்தியிருந்தது அந்த கவிதை. அந்தக்கவிதை சொல்ல வந்த செய்தியை, உணர்வுகளை மிகத்துல்லியமாக சொல்லியிருந்தது. மரணம் என்பது உயிர் உடலைவிட்டுப் போவது மட்டுமல்ல என்பதை முகத்திலறைந்தார் போல் சொல்லி இருந்தீர்கள். மரணம் சம்பந்தமாக தேன்கூடு போட்டிக்காக வந்த படைப்புகளிலும் சரி இனி அது போல வரும் படைப்புகளானாலும் சரி உங்கள் கவிதையின் இருப்பு என்றும் மறையாது.
இந்த வெற்றி அனுதாப வெற்றி அல்ல. முற்றிலும் தகுதியான வெற்றியே. தமிழோவிய சிறப்பு ஆசிரியர் என்பது உங்களுக்கு ஒரு நல்ல வாய்ப்பு. சமூகத்திற்கு உங்கள் குரலைச் சொல்ல மற்றுமொரு வாய்ப்பு. சிறப்பான படைப்புகளளோடு களமிறங்குவீர்கள் என்ற நம்பிக்கையோடு...
முத்துகுமரன்
லிவிங் ஸ்மைல் வித்யா!,
வாழ்த்த தாமதமா வந்தா அதுக்குள்ளா இப்படி ஒரு பூதம் கிளம்பிடுச்சா? எவன் சொன்னது சிம்பதிக்காகனு அப்படி இருந்தா முதல் இடம் தான் வந்து இருக்கனும். மேலும் முதல் மூன்று இடம் வாங்கிய படைப்புகளுக்கான வாக்கு வித்தியாசம் வெகு சொற்பம் என்பதையும் பார்க்க நிலா- 36, வித்யா 34, பொன்ஸ்- 33,(வயதல்ல அவர்கள் பெற்ற வாக்குகள்) எனவே எல்லாம் படைப்பின் அடிப்படையில் பெற்ற வாக்குகள் தான் என்பேன். நான் வாக்களித்தது உங்கள் எழுத்திற்கு தான். எதாவது ஜந்து விஷக்கொடுக்கால் தீண்டினால் அதற்கு வைத்தியம் தான் செய்ய வேண்டும் அதை விட்டு புறக்கணிக்காதிர்கள்.
மீண்டும் வாழ்த்துகள்!
நிலா அதனை தனிமடலாக அனுப்புயிருந்தார்.. தவறுதலாக பிரசுரமானது..
மன்னிக்கவும்...
மனம் எனக்கு வலித்தது.
Just ignore it!!
A honest and a caring suggestion.
start a new blog with a different identity. Do not say who you are. See how people respond to that.
A well wisher,
Premlatha
(I admire the courage you have shown so far in your life).
I also have a tamil blog:
premalathakombaitamil.wordpress.com
LSV,
இப்பின்னூட்டத்தை ராமச்சந்திரன் உஷா, முத்துக்குமரன் இருவரின் பின்னூட்டத்தின் தொடராகக் கொள்ளவும்.
சிந்திய வர்த்தைகளை மீண்டும் பொறுக்க முடியாதுதான். ஆனாலும் அவர் உங்களை நிச்சயமாக நினைத்து எழுதவில்லையே. பரிசு பெறாத மற்றவர்களின் கதைக்குப் பொதுவாக அளித்த ஒரு கணிப்பை நீங்கள் இவ்வாறு எடுத்துக்கொள்ளக்கூடாது.
அடுத்து, ஒரு நண்பர் சொன்னது போல, நீங்கள் வலையுலகத்துக்குப் புதியவர். இந்த வலையுலகத்தில் மனம் புண்படுத்துவது, புரிதல் இல்லாத கருத்து மோதல்கள் இவைகள் அதிகம். அவைகளுக்காக நாம் நம் தன்னிலையை இழக்கவோ, எழுத்தைக் குறைத்துக்கொள்ளவோ கூடாது.
உங்களிடம் நாங்கள் எல்லோரும் நிறைய எதிர்பார்க்கும் நேரத்தில் நீங்கள் இதுபோன்ற முடிவுகள் எடுப்பது சரியல்ல.
நீங்கள் நீங்களாக இருங்கள். இந்தச் சின்ன சலசலப்புகள் உங்களை சஞ்சலப்படுத்த அனுமதிக்காதீர்கள்.
சகோதரி வித்யா அவர்களே,
உங்கள் மரணம் பற்றிய கவிதைக்கு 58-60 பின்னூட்டங்கள் கிடைத்திருக்கிறது.
போட்டியில் வாக்குகள் அதைவிட குறைவுதான். இதன் மூலம் பெற்றவாக்குகள் சிம்பதிக்கு என்று ஏன் எடுத்துக் கொள்கிறீர்கள். உங்கள்
கவிதையில் சிம்பத்தி இல்லை என்கிறீர்களா? சிம்பத்தி வாக்கு என்றால் அது கவிதையில் உள்ள சிம்பத்தி (சோகத்திற்கு) என்று எடுத்துக் கொள்ளலாமே !
தாழ்வு மனப்பான்மை வேண்டாம் என்று சொல்லும் நீங்கள், இந்த பதிவின் மூலம் தாழ்வு மனப்பான்மையில் தான் இருக்கிறீர்கள் என்று நினைக்கிறேன். மாறுபட்ட தன்மை உள்ளவருக்கு உள்ள சந்தேகங்கள் இப்படியும் இருக்குமோ என்றும் எண்ணத் தோன்றுகிறது, மீண்டும் உங்கள் முடிவுகளை பரிசீலனை செய்யுங்கள்.
பரிசை மறுத்திருப்பதன் மூலம் நீங்கள் உண்மையான ஊக்கமுள்ள படைப்பாளி என்பதை நிரூபித்திருக்கிறீர்கள். வாழ்த்துக்கள், நீங்கள் இரண்டாம் இடத்தில் வந்ததற்கல்ல. தொடர்ந்து எழுதுவதற்கு, உங்களின் உண்மையான இலட்சியத்தை அடைவதற்கு.
வித்யா,
உங்கள் கவிதை அருமையாய் இருந்தது. ஓட்டுப் போட்ட எல்லொருமே சிம்பதியில் போட்டார்களெனச் சொல்வது பலரின் கலா ரசனையை, உங்கள் விஷயத்தில் சமூகப் பார்வையையும், குறை கூறுவதுபொலாகும்.
இதுபோல ஓட்டெடுத்து ஜெயுக்கும்போதெல்லாம் பரிசு வேண்டமென்பீர்களா? இதற்காகவா இத்தனை முயற்சிகள் எடுக்கிறீர்கள்.
கட்டாயம் நீங்கள் தமிழோவியத்தில் எழுதுங்கள். வலைப்பதிவில் எழுதுவது வேறு அங்கே மின் பத்திரிகையில் எழுதுவது வேறுமாதிரியானானுபவம்.நிச்சயம் எழுதுங்கள்.
நேரம் கிடைக்கவில்லை என்பது வேற விஷயம். நிலா இந்த வரம் அழகாய் பலரையும் எழுதச் சொல்லியிருக்காங்க பாருங்க.
கொஞ்சம் அவசரமாகவும், அதிகமாகவும் உணர்ச்சிவசப்படுகிறீர்கள் என்று நினைக்கிறேன், வாழும் புன்னகை வித்யா!
வாழ்வின் அடிகளிலேயே கொடுமையான அடியைப் பட்ட உங்களைப் போன்றோருக்கு இப்படி ஆவதில் வியப்பில்லை.
ஆனால், எதிர்நீச்சல் போடுவது என முடிவு செய்த நீங்களுமா?
உங்கள் கவிதை ஒரு நல்ல கவிதை என்பதில் சந்தேகமில்லை.
மற்ற சில படைப்புகளும் நன்றாகவேதான் இருந்தன.
அவற்றை மற்றவரால் உணர முடிந்தது.
அதனால் அவற்றை ரசிக்கவோ, மறுக்கவோ உரிமை இருந்தது.
ஆனால் நீங்கள் வடித்தது இங்கு இருக்கும் எவராலும் உணரப்பட முடியாத ஒரு வேதனை.
ஒரு குடும்பத்தின் மரணம் அந்தக் குடும்பத்திற்குத்தான் புரியும்.
அதனால் பாதிக்கப்படாவிடினும், அதில் பங்கு கொள்வது அனுதாபம் என்று மட்டுமே கொள்ள முடியும்.
இதுதான் வாழ்வின் நிதரிசனம்.
ஆனால் அனுதாபம் என்பதால் மட்டுமே அந்த இழப்பின் மதிப்பை அடுத்தவர்கள் குறைத்து மதிப்பிட்டார்கள் எனப் பொருள் இல்லை.
மாறாக, தெரியாத வலியில் தானும் பங்கு பெற வேண்டும் என்பதில் எழுந்த துடிப்பே அனுதாபத்தின் ஆணிவேர்.
இதனை நீங்கள் தயவு செய்து புரிந்து கொள்ளவேண்டும்.
நண்பர் ஜயராமன் கூறியதில் தவறேதும் இல்லை.
முதல் மூன்று கதைகளைப் பாராட்டி, உங்கள் வெற்றியில் 'அனுதாபம்' என்னும் பங்கு கொள்ளும் உணர்வு மற்றவர்க்கு இருந்ததையே பதித்திருக்கிறார்.
பின்னர் "மற்ற" கதை, கவிதைகளை விமரிசித்திருக்கிறார்.
உங்கள் படைப்பை அல்ல!
சம்பந்தப்பட்ட அனைவருக்கும் மனவேதனைதான் மிஞ்சியது இதனால்.
போராடத்துடிக்கும் நீங்கள் இன்னும் சற்று நிதானமாகச் சிந்திப்பீர்கள் என நிச்சயமாக நம்புகிறேன்.
மேலும் தொடர்ந்து எழுதுங்கள்.
தவறாகப் புரிந்து கொள்ள மாட்டிர்கள் நீங்கள் என்ற நம்பிக்கையும் உண்டு.
மற்றவர்கள் பாய்ந்தால் அதைப் பற்றி கவலைப் பட மாட்டேன்.
நான் எழுதியது உங்களுக்கு!
உங்கள் நலனில் அக்கறை உள்ள ஒரு நண்பன் என்ற முறையில்.
நன்றி.
வாழ்த்துகள்!
லிவிங் ஸ்மைல் வித்யா ,
பரிசுக்குறிய தகுதி இருக்கிறதோ இல்லையோ , எல்லாக் கவிதையும் படிக்காததால் ஒப்பு நோக்கி சொல்ல முடியவிலலை . ஆனால் என்னைப் போன்றவர்களை மிகவும் பாதித்திருக்கும் என்பதில் உங்களுக்கு ஒரு சந்தேகமும் வேண்டாம் . உங்களின் குறிக்கோள் நிறவேறிக்கொண்டிருக்கும் நேரம். நீங்கள் தொடர்ந்து எழுதவும் . என்னைப்போன்றவர்களின் பார்வை கொஞ்சம் மாறட்டும் .
//வித்யா,
நான் செலுத்திய ஓட்டு உங்கள் கவிதையின் வீரியத்திற்காகத்தான். எனது ஓட்டை உங்கள் படைப்புக்கும் மட்டுமே அளித்திருந்தேன். எனக்குள் அத்துணை அதிர்வை ஏற்படுத்தியிருந்தது அந்த கவிதை. அந்தக்கவிதை சொல்ல வந்த செய்தியை, உணர்வுகளை மிகத்துல்லியமாக சொல்லியிருந்தது. மரணம் என்பது உயிர் உடலைவிட்டுப் போவது மட்டுமல்ல என்பதை முகத்திலறைந்தார் போல் சொல்லி இருந்தீர்கள். மரணம் சம்பந்தமாக தேன்கூடு போட்டிக்காக வந்த படைப்புகளிலும் சரி இனி அது போல வரும் படைப்புகளானாலும் சரி உங்கள் கவிதையின் இருப்பு என்றும் மறையாது.
இந்த வெற்றி அனுதாப வெற்றி அல்ல. முற்றிலும் தகுதியான வெற்றியே. தமிழோவிய சிறப்பு ஆசிரியர் என்பது உங்களுக்கு ஒரு நல்ல வாய்ப்பு. சமூகத்திற்கு உங்கள் குரலைச் சொல்ல மற்றுமொரு வாய்ப்பு. சிறப்பான படைப்புகளளோடு களமிறங்குவீர்கள் என்ற நம்பிக்கையோடு...
முத்துகுமரன்
//
அன்பின் வித்யா,
நான் சொல்ல நினைத்ததை முத்துக்குமரன் சொல்லி இருக்கிறார்.
உங்களுக்கு விழுந்தது நிச்சயமாக அனுதாப ஓட்டல்ல. சிம்பதிக்காக எழுதப்பட்டதும் அல்ல.
நான் விழுப்புரத்தில் படிக்கும்போது கூவாகம் வரும் திருநங்கையர் பலர் படும் அவஸ்தைகளை கண்கூடாகக் கண்டிருக்கிறேன். உங்களது எழுத்துகள் ஒரு சிலரின் பார்வையையாவது மாற்றுமெனில் அது வெற்றியே. தொடர்ந்து எழுதுங்கள். கிடைக்கும் அத்தனை வாய்ப்புகளையும் பயன்படுத்துங்கள்.
இரக்கம் - இங்கு இரண்டு வகை.
ஒன்று: "பாவம்...ஏதோ சூழ்நிலை...அதை கணக்கிட்டு பரிசளிக்கப் பட்டது".இது தவறு.
இரண்டு:"சமுதாயத்தில் இந்த விசயம் கவனத்திற்கு உள்ளாக வேண்டியது.அது இங்கு சொல்லப்படுகிறது".இதில் இரக்கமான ஒரு விசயம் அதில் உள்ள உண்மை, மற்றும் அவசியத்தின் பால் கவனிப்பாகி நாளடைவில் உரியன செய்யப்படுகிறது.சுதந்திரம் கூட இப்படித் தான் பெறப்பட்டது.இவ்வகை இரக்கம் தவறு அல்ல.It is equivalent of attention and necessary action.The prize has been given this way rather than the first way.And moreover a writer can never hide him/her in his/her writings.So beware of the distinction.
மன்னித்துக்கொள் தோழியே...
(எதற்க்கு இந்த மன்னிப்பு..? திரு.ஜயராமன் என்னைப்போல் ஒரு சக வலைப்பதிவர் என்ற முறைக்காக)
உனது இந்தப் பதிவு வந்தவுடனே நான் படித்தேன், அதற்க்குப் பின்னூட்டமும் உடனே எழுதினேன்,ஆனால் அதை நான் பதிவிடவில்லை,பதிவிட்டிருந்தால் நிச்சயம் நண்பர் திரு.ஜயராமன் வருத்தப்பட்டிருப்பார்,
அவ்வளவு கோபம் இருந்தது,
சொல்லுவதையும் சொல்லிவிட்டு பின் சப்பைக்கட்டு வேறு, வேண்டாம் விட்டு விடலாம் இத்துடன், பின் உணர்ச்சிவசப்பட்டு எதேனும் சொல்லிவிட்டால் அவருக்கும் ,மற்றவர்களுக்கும் வித்தியாசமில்லை,
நான் வெளியிடாதா அந்த பின்னூட்டமே ஒரு பெரிய பதிவு போல் இருக்கும்,அதை வெளியிடுவதை விட, இந்த சின்ன பின்னூட்டத்தில் ஏதேனும் ஒரு வார்த்தை அவரை(நிச்சயம் நண்பர் இதையும் படிப்பார்) யோசிக்க வைக்குமாயின் அது போதும்.
அன்புடன்...
சரவணன்.
வித்யா,
நான் உங்களுக்கு வாக்களிக்கவில்லை. புதுக் கவிதைகளைப் பற்றிய என்னுடைய தனிப்பட்ட நிலைபாடே அதற்குக் காரணம். ஆனால் உங்கள் கவிதையைப் படித்தவுடனே இது பரிசு வெல்லும் என்று எனக்குத் தோன்றியது. புதுக் கவிதைகளின் மேல் வலை அன்பர்களுக்கு உள்ள பரவலான அபிமானமும் உங்கள் கவிதையின் பொருட்செறிவும் அதை உங்களுக்குப் பெற்றுத் தரும் என்று நான் உண்மையாக நம்பினேன். அதேதான் நடந்திருக்கிறது. உங்களுக்கு விழுந்த வாக்குகள் அனுதாபத்தால் விழுந்த வாக்குகள் அல்ல. நான் வாக்களிக்க விரும்பி என்னுடைய சுய கட்டுப்பாடு காரணமாக உங்களுக்கு அதை அளிக்க முடியாமல் போய்விட்டது.
மீண்டும் வலியுறுத்திக் கூறுவேன். உங்கள் வெற்றிக்கு உங்கள் படைப்பு முற்றிலும் தகுதியானது.
ஜயராமன் குறிப்பிட்ட அனுதாபம் உங்கள் கவிதையில் விவரிக்கப் பட்டவர்களுக்கே என்பது என் புரிதல். இன்னமும் அவ்வாறே நம்புகிறேன். அவர் மன்னிப்புக் கேட்டுள்ளார். இது பற்றி மேலும் அவர் விளக்குவதற்கு அவருக்குள்ள தர்மசங்கடத்தைப் புரிந்துகொள்ளுங்கள்.
தம்பி என்பவருக்கு - ஒருவர் உளமாற மன்னிப்பு கேட்பதை விமர்சிப்பது எனக்கு சரியாகப் படவில்லை. ஜயராமனின் சொற்களில் பாசாங்கு இருப்பதாக எனக்குத் தெரியவில்லை.
விதயா, மன அமைதி பெற்று மேலும் தொடர்ந்து வலைப் பதிவீர்களாக! வெற்றிகளை தொடர்ந்து குவிப்பீர்களாக!
மிக்க அன்புடன்
ஓகை நடராஜன்.
வித்யா,
ஜெயராமன் அவர்களுக்கு கருத்துக்களுக்கு சப்பைக்கட்டு கட்டுகிறவர்கள் அவர் கூறிய "இழவு வீட்டு களை" சமாச்சாரத்தையும் "மனவிகாரங்கள்" சமாச்சாரத்தையும் வசதியாக மறந்துவிட்டு பேசுகிறார்கள். ஆனால் இந்த வாக்கியத்தின் தொடர்ச்சியே அவர் உங்கள் வெற்றியை அனுதாப ஓட்டாக கூறியது என்பது எல்லாருக்கும் புரிந்துத்தான் உள்ளது.
உங்களின் அந்த கவிதையையே அவர் படித்திருக்கமாட்டார் என்றுதான் எனக்கு தோன்றுகிறது.
இவர்களுக்கு மற்றவர்கள் உணர்வுகள் ஒரு பொருட்டல்ல.தன் நிலையை தக்க வைப்பது மட்டும் தான் இவர்கள் குறிக்கோள்.இவர்களின் கருத்துக்களை சீரியஸாக எடுத்துக் கொள்வதும் தேவையில்லாதது. (மேலும் அவரே வருந்தியுள்ளாரே).விடுங்கள்.தொடர்ந்து இயங்குங்கள்.
///இதன் மூலம் பெற்றவாக்குகள் சிம்பதிக்கு என்று ஏன் எடுத்துக் கொள்கிறீர்கள். உங்கள்
கவிதையில் சிம்பத்தி இல்லை என்கிறீர்களா? சிம்பத்தி வாக்கு என்றால் அது கவிதையில் உள்ள சிம்பத்தி (சோகத்திற்கு) என்று எடுத்துக் கொள்ளலாமே !///
நல்லா சொல்லி இருக்கார் பாருங்க பின்னூட்ட நாயகர் கோவி,கண்ணன்..
மத்தபடி - நான் உங்களுக்கு ஓட்டு போட்டேன்...
அதை சிம்பத்திக்காகத்தான் போட்டேன் என்று உண்மையை சொல்லிக்கொள்கிறேன்...
செந்தழல்ரவி, நீங்க வேற ஏன் குழப்பரீங்க? கவிதையில் உள்ள சிம்பதி தானே? தெளிவாய் சொல்லுங்கள்.
வித்யா என்னாச்சும்மா உனக்கு எதுக்கு இவ்வளவு கோபமும் வெறுப்பும் கலந்த வார்த்தைகள். இவ்வுலகில் விமர்சனமில்லாத வாழ்க்கை என்பது யாருக்குமே கிடையாது. நம்மிருவரிடையே சந்திப்பு நிகழ்ந்த பின்னே தான் சகோதரி என்னுள் பல மாற்றங்கள்.
உலகில் எவ்வளவு கொடுமையான தருணங்கள் இருக்கின்றன என்பதை உணர்த்தியது உன் மரணகவிதை.
என்னை பொறுத்தவரை இது ஒரு தேவையில்லாத+ ஏற்றுக்கொள்ளமுடியாத முடிவு.... :-(
இதற்கு மேல் உன்னுடய விருப்பம் சகோதரி.....
இதைப் படிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்! நன்றி.
http://aaththigam.blogspot.com/2006/07/blog-post_29.html
வித்யா,
கல்லடி பட்டாலும்
அன்றி
சொல்லடி பட்டாலும்
முன்வைத்த காலை
பின்னெடுக்காதீர்கள்!!!
தொடருட்டும் உமது விழிப்புணர்வு எழுத்துச்சேவை
///செந்தழல்ரவி, நீங்க வேற ஏன் குழப்பரீங்க? கவிதையில் உள்ள சிம்பதி தானே? தெளிவாய் சொல்லுங்கள்.///
கவிதையில் உள்ள சிம்பத்தி அல்ல..
லிவிங் ஸ்மைல் வித்யா, அந்த கவிதையில் இருந்த வரிகளின் வலிமை, நிதர்சனத்தின் கொடுமையை கன்னத்திலறைந்தார்போல் சொன்னதற்கே என் ஓட்டு....
இத்தகைய விளக்கம் கேட்கும் நிலை வலைப்பூ பக்கமும் வந்துவிட்டது வருந்தத்தக்கது... திறமை எங்கிருந்தாலும் அங்கீகாரம் பெரும், கடும் உழைப்பின் பிண்ணனியிருந்தால்...
now there is a topic like uravugal...i know - she will write about Thirunangai and Man uravugal...
prize is with her..
Dear Vidya,
Just now i read your the book Oru Thirunangaiyin uluki yedukum Valkai Anubavam. I didnt feel like putting down the book till i completed it. Really you were in front of me from the day i started reading it.You gave me a chance to know the difficulties faced by such people with your lively experience. If i get a chance to give employment opportunity to someone in future and come across a person like you, really i would give an opportunity. Tears filled my eyes and my heart ached alot.Let the cvrrrreator bring a solution for all such things.
Post a Comment