ப்ளாக்கை விட்டா போகிறேன்....?

நண்பர்களே!! எனது முந்தைய பதிவில் கூறியிருந்ததை பலரும் சரியாக புரிந்து கொள்ளாமல் இருப்பதை பார்க்கிறேன்..

உணர்ச்சிவசப்படுவதை நிறுத்திவிட்டுப் படித்தால் நான் சொல்ல வருவதின் அர்த்தம் புரிந்திருக்கும்

இனி...

நான் ப்ளாக்குவதற்கு காரணமென்ன..?

கண்டிப்பாக எனது எழுத்து திறமையைக் காட்டவோ, தமிழைக் காப்பற்றவோ (எந்த மொழியின் மீதும் தனிப்பற்றும் கூட கிடையாது)அல்ல.. எனக்கு எழுதுவதில் பெரிய ஆர்வமோ; திறமையோ எப்போதும் இருந்ததில்லை என்பதுதான் உண்மையும். நடிகையாக ஆசைப்பட்டதுண்டு; ரிசர்ச் ஸ்காலராக ஆசையுண்டு ஆனால் ரைட்டராகும் ஆசையிருந்ததில்லை; இருந்தும் நான் எழுத வந்ததன் முழு காரணம், நாங்களும்(திருநங்கைகளும்) மனிதர்கள் தான்; இதே இந்தியாவில் தான் நாங்களும் இருக்கிறோம்.. எங்களையும் கொஞ்சம் நினைத்துப் பாருங்கள் என்று எங்களைக் குறித்த பிரக்ஞையை மக்கள் மண்டையில் ஏற்ற வேண்டும் என்பதே.


பரிசை முன்னிருத்தியா நான் கவிதை எழுதினேன்?

இல்லை. கவிதை எழுதினேன்.. அதை போட்டிக்கும் இணைத்தேன். அவ்வளவே, ஒருவர் திறமைசாலியாய்; சிறந்த படைப்பாளியாய் இருப்பதென்பது நல்லதே... ஆனால், அவர் திறமைசாலியாய் தான் இருக்க வேண்டும் என்று கட்டாயம் இல்லை.. அந்த விதத்தில் ஒரு பொது தளத்தில் நுழைய சமஉரிமை வேண்டும். இது மட்டும் தான் எங்களுக்கு வேண்டும். என் திறமையில் வெற்றியென்றால் சந்தோசம் (வெற்றியை யாராவது வேண்டாமென்றா சொல்வார்கள்). வெறும் அனுதாபம்/பச்சாதபம் இதெல்லாம் என்னை எரிச்சலாக்குவன அது எனக்கு வேண்டாம் என்று சொல்கிறேன்.. இதிலென்ன தவறுல்லது..?

சரி, பரிசை ஏன் பரிசீலிக்குமாறு சொன்னேன்...?

ஆம், பரிசை பரிசீலிக்கத்தான் சொன்னேன். வேண்டாமென்று சொல்லவில்லை. காரணம், ஒரு படைப்பைக் குறித்த விமர்சனம் இருக்கலாம். அரசியல் இருக்கக் கூடாது.. மற்ற எந்தப் படைப்பிற்கும் இல்லாத ஒரு விமர்சனம் எனது படைப்பில் மட்டும் வரக் காரணமென்ன..?
நேர்மையான, உண்மையான எந்த படைப்பாளிகளுக்கும் படைப்பைத் தாண்டி, ஆனால் படைப்பையே கேலிக்குள்ளாக்கும் இத்தகைய விமர்சனம் எரிச்சலைத்தான் தரும். ஒருவேளை நண்பர்களின் விமர்சனப் பார்வை(?!)யின்படி மேற்படி கவிதை பரிசுக்கு தகுதியில்லை என்ற கருத்து பரவலாக எழும் பட்சத்தில் மறுபரிசீலிக்கத்தான் கூறினேன்.. தெயவங்களே!! இதிலென்ன தவறுல்லது...


தொடர்ந்து பிளாக்க மாட்டேனா..?

சிலர் என்னிடம் போனில் தொடர்பு கொண்டு "இதற்காக ப்ளாக்குவதை நிறுத்தலாமா..?" என்ற ரேஞ்சில் புலம்பத்துவங்கி விட்டனர்.. மக்களே!! எப்போதும், எந்த இடத்திலும் நான் பிளாக்குவதை நிறுத்துவதாக சொல்லவேயில்லை.. எங்கள் பிரச்சனையை முடிந்தவரை பொதுத் தளத்துக்குக் கொண்டு செல்வதை எனது தார்மீகக் கடமையாக செய்துவருகிறேன். அந்த விதத்தில், ப்ளாக்கை விடும் idea எனக்கு எப்போதும் இருந்ததில்லை.. Infact, தலைப்பைப் பொருத்து அடுத்த மாதமும் நான் போட்டியில் சேருவேன்..

இறுதியாக, வெற்றி தோழ்வி என் வேட்கையல்ல, வாய்ப்பு மட்டுமே என்பதைக் கூறி., தொடர்ந்து யாரும் பின்னூட்டமிடவும் வேண்டாம் என்றும். குறிப்பாக, என்னை சிறுபிள்ளைத்தனமாக பதில் பின்னூட்டமிடும் வகையில் நிர்பந்திக்க வேண்டாம் என்றும் கேட்டுக் கொள்கிறேன்...

The Game is Over...

சில சுவாரஸ்யமான பின்னூட்டங்களை இத்துடன் இணைத்துள்ளேன்.

// வாழ்க்கையில் பல சோதனைகளையும் வேதனைகளையும் தாண்டி வந்த உங்களுக்கு இந்த
வார்த்தைகள் எல்லாம் தூசு.
வாழ்க்கையில் சாதனைகள் என்று நினைத்து பலர் புகழும்பொழுது, சில எதிர்வினைகளும் வரத்தான்
செய்யும். இவை வெற்றியின் இன்னொரு பக்கம். இரண்டையும் ஓரே மாதிரி பாவித்தால்,
எதுவும் நம்மை பாதிக்காது என்பது என் கருத்து.// said ராமசந்திரன் உஷா

// லிவிங் ஸ்மைல்,
என்னங்க இது? ஒரே ஒருவரின் தனிப்பட்ட கருத்துக்கு எதுக்குங்க தனிப் பதிவு போட்டு பரிசு வேண்டாம்னு சொல்லிகிட்டு... // said பொன்ஸ்

//சொல்லடி சாதரணமானது! அதை பெரிதுபடுத்தக்கூடாது என்பது என் கருத்து! பரிசு உங்கள் கவிதைக்கு தான் ஸ்மைல்!! // said We the people

// லிவிங் ஸ்மைல் வித்யா!
பரிசு வெளியிடப்பட்ட நாளில் வென்றேனே என்று மகிழ்ச்சியாய் ஒரு பதிவை போட்டிங்க அது சரி .
அடுத்த நாள் ஒரு பின்னூட்டத்தை வச்சி பரிசு வேணாம்னு சொல்றதா? // said தம்பி

// A honest and a caring suggestion.

start a new blog with a different identity. Do not say who you are. See how people respond to that. // said பிரேம லதா

// நீங்கள் வலையுலகத்துக்குப் புதியவர். இந்த வலையுலகத்தில் மனம் புண்படுத்துவது, புரிதல் இல்லாத கருத்து மோதல்கள் இவைகள் அதிகம். அவைகளுக்காக நாம் நம் தன்னிலையை இழக்கவோ, எழுத்தைக் குறைத்துக்கொள்ளவோ கூடாது.

உங்களிடம் நாங்கள் எல்லோரும் நிறைய எதிர்பார்க்கும் நேரத்தில் நீங்கள் இதுபோன்ற முடிவுகள் எடுப்பது சரியல்ல.

நீங்கள் நீங்களாக இருங்கள். இந்தச் சின்ன சலசலப்புகள் உங்களை சஞ்சலப்படுத்த அனுமதிக்காதீர்கள். // said தருமி

// தாழ்வு மனப்பான்மை வேண்டாம் என்று சொல்லும் நீங்கள், இந்த பதிவின் மூலம் தாழ்வு மனப்பான்மையில் தான் இருக்கிறீர்கள் என்று நினைக்கிறேன். மாறுபட்ட தன்மை உள்ளவருக்கு உள்ள சந்தேகங்கள் இப்படியும் இருக்குமோ என்றும் எண்ணத் தோன்றுகிறது, மீண்டும் உங்கள் முடிவுகளை பரிசீலனை செய்யுங்கள். // said கோவி கண்ணன்

// பரிசை மறுத்திருப்பதன் மூலம் நீங்கள் உண்மையான ஊக்கமுள்ள படைப்பாளி என்பதை நிரூபித்திருக்கிறீர்கள். // said முபாரக்

// இதுபோல ஓட்டெடுத்து ஜெயுக்கும்போதெல்லாம் பரிசு வேண்டமென்பீர்களா? இதற்காகவா இத்தனை முயற்சிகள் எடுக்கிறீர்கள்.// said சிறில் alex

// நண்பர் ஜயராமன் கூறியதில் தவறேதும் இல்லை.
முதல் மூன்று கதைகளைப் பாராட்டி, உங்கள் வெற்றியில் 'அனுதாபம்' என்னும் பங்கு கொள்ளும் உணர்வு மற்றவர்க்கு இருந்ததையே பதித்திருக்கிறார்.

பின்னர் "மற்ற" கதை, கவிதைகளை விமரிசித்திருக்கிறார்.
உங்கள் படைப்பை அல்ல!
சம்பந்தப்பட்ட அனைவருக்கும் மனவேதனைதான் மிஞ்சியது இதனால்.
போராடத்துடிக்கும் நீங்கள் இன்னும் சற்று நிதானமாகச் சிந்திப்பீர்கள் என நிச்சயமாக நம்புகிறேன்.
மேலும் தொடர்ந்து எழுதுங்கள்.
தவறாகப் புரிந்து கொள்ள மாட்டிர்கள் நீங்கள் என்ற நம்பிக்கையும் உண்டு. // said sk

// நான் விழுப்புரத்தில் படிக்கும்போது கூவாகம் வரும் திருநங்கையர் பலர் படும் அவஸ்தைகளை கண்கூடாகக் கண்டிருக்கிறேன். உங்களது எழுத்துகள் ஒரு சிலரின் பார்வையையாவது மாற்றுமெனில் அது வெற்றியே. தொடர்ந்து எழுதுங்கள் // said kvr

// "சமுதாயத்தில் இந்த விசயம் கவனத்திற்கு உள்ளாக வேண்டியது.அது இங்கு சொல்லப்படுகிறது".இதில் இரக்கமான ஒரு விசயம் அதில் உள்ள உண்மை, மற்றும் அவசியத்தின் பால் கவனிப்பாகி நாளடைவில் உரியன செய்யப்படுகிறது.சுதந்திரம் கூட இப்படித் தான் பெறப்பட்டது.இவ்வகை இரக்கம் தவறு அல்ல.It is equivalent of attention and necessary action.The prize has been given this way rather than the first way.And moreover a writer can never hide him/her in his/her writings.So beware of the distinction. // said clown

// ஜயராமன் குறிப்பிட்ட அனுதாபம் உங்கள் கவிதையில் விவரிக்கப் பட்டவர்களுக்கே என்பது என் புரிதல். இன்னமும் அவ்வாறே நம்புகிறேன். அவர் மன்னிப்புக் கேட்டுள்ளார். இது பற்றி மேலும் அவர் விளக்குவதற்கு அவருக்குள்ள தர்மசங்கடத்தைப் புரிந்துகொள்ளுங்கள்.

தம்பி என்பவருக்கு - ஒருவர் உளமாற மன்னிப்பு கேட்பதை விமர்சிப்பது எனக்கு சரியாகப் படவில்லை. ஜயராமனின் சொற்களில் பாசாங்கு இருப்பதாக எனக்குத் தெரியவில்லை.

விதயா, மன அமைதி பெற்று மேலும் தொடர்ந்து வலைப் பதிவீர்களாக! வெற்றிகளை தொடர்ந்து குவிப்பீர்களாக! // ஓகை நடராஜன்

// 2. உங்கள் அடையாளத்தை மாற்றிக் கொள்ளாதீர்கள். நீங்கள் நீங்களாகவே இருந்து வெல்ல வேண்டும். வெல்வீர்கள். அதற்கு வேண்டிய மனவுறுதி ஏற்கனவே இருக்கிறது. அது தொடரட்டும்.

3. சில நேரங்களில் அடுத்தவர் பேச்சை கண்டுகொள்வது எவ்வளவு அவசியமானதோ....அந்த அளவிற்கு அவசியமானது கண்டுகொள்ளாமல் இருப்பதும்.

அவ்வளவுதான். தொடரட்டும் பயணம் தொய்வில்லாமல். துணைக்கு நாங்கள் இருக்கிறோம் // said ராகவன்...

தேன் கூடு முடிவுகளில் நண்பர் சதயம் கூறியிருந்தது...

// எனக்கென்னவோ நம்ம பொன்ஸ்க்கு மொதப் பரிசு கொடுத்திருக்கலாம்….வித்யாவுக்கு மூனாம் ப்ளேஸ் …ஏதோ இந்த தடவ தப்பு பண்ணீட்டீங்க…அடுத்த வாட்டி பரிசு அனொன்ஸ் பண்றதுக்கு முன்னால நம்ம கைல ஒருவார்த்த கேட்டுட்டு செய்ங்க…..சரியா… // said சதயம்


// தேன்கூடு தந்த அங்கீகாரத்தை நிராகரிக்கும் அளவிற்கு நீங்கள் வளர்ந்து விட்டதாக நிணைக்கிறீர்களா?, அல்லது தேன்கூட்டின் தரத்தை குறைவாக மதிப்பிடுகிறீர்களா?...

இம்மாதிரியான சின்னச் சின்ன வார்த்தைகள் உங்களை கூட்டுக்குள் முடக்குமானால் நீங்கள் சாதிக்கப் பிறந்ததாய் சொல்லிக்கொள்வதில் அர்த்தமில்லை சகோதரி... // said சதயம்

// தேன்கூடு தேர்ந்தெடுத்த பரிசை விமர்சிக்கும் சதயத்தையும், ஜெயராமனையும் விட சந்தேகமேயில்லாமல் நான் பெரிய ஆள் தான்...? மேலும், சாதிக்கப் பிறந்ததாக நான் யாரிடம் சொன்னதில்லை...// said லிவிங் ஸ்மைல் வித்யா

25 நண்பர்கள் புன்னகையை பதித்துள்ளனர்:

கோவி.கண்ணன் said...

சகோதரி உயிர்சிரிப்பு அவர்களே,
நாங்கள் உணர்ந்து அளித்த பின்னூட்டம் உங்களுக்கு சுவாரிஸ்யமாக இருக்கிறதா ? இப்ப நீங்கள் சிரிக்கிறீர்கள் ... நாங்கள் விழிக்கிறோம் :)
இது தமாஸ் தான் :))))

ginglee said...

UNGALUDAIYA PIRACHNAITHAN ENNA....YARU ENNA SONNAL ENNA...UN MAMADUKKU NEE YARU ENDRU THERIYUM...APPURAMENNA....WITH LOVE AZAD

செந்தில் குமரன் said...

///
எங்களையும் கொஞ்சம் நினைத்துப் பாருங்கள் என்று எங்களைக் குறித்த பிரக்ஞையை மக்கள் மண்டையில் ஏற்ற வேண்டும் என்பதே.
///

என் மண்டையில் பசு மரத்தாணி போல ஏத்தீட்டீங்க அதற்காக நன்றிகள். எந்த பிரச்சனைக்கும் பத்தியும் கருத்து சொல்றதில்லை அப்படீன்னு முடிவு அதனால் பிரச்சனை பத்தி கருத்து இல்லை(நோ கமெண்ட்ஸ்). உங்களுக்கு எப்படி தோணுதோ அதை செய்யுங்க, எழுதுங்க மத்தவங்களுக்கு எப்படி தோணுதோ அப்படி செய்யட்டும், எழுதட்டும். என் ஒருவனோட கருத்தால எதுவும் மாறப் போறதில்லை அதனால தப்புச்சுக்கோ(எஸ்கேப்).

G.Ragavan said...

சரி..இந்தப் பிரச்சனை முடிஞ்சு போச்சு. அடுத்த பதிவு எப்போ?

Chinnakutti said...

vidhya, neenga maru pariseelanai panna solrathu theviye illa, enna ithu oru thani nabaroda mudivu illa, palar vakkaliththu edutha mudivu, avanga vakku ungalukku illa unga padaippukku, mathavangaloda unarchiya purinchukkama pesaravanga varthaikku mathippu koduthu, unga padaippai mathithavangala varutha pada vaikkatheenga pleaseeeeeee.

ஜோ / Joe said...

உன்னைப் பற்றி யாரு என்ன சொன்னால் என்ன
இந்த காதில் வாங்கி அதை அந்த காதில் தள்ளு!

பொன்ஸ்~~Poorna said...

//உன்னைப் பற்றி யாரு என்ன சொன்னால் என்ன
இந்த காதில் வாங்கி அதை அந்த காதில் தள்ளு!
//
ஜோ, அதான் புது ப்ரோபைல்ல ஒரு காது மட்டும் போட்டிருக்காங்களா? ;)

ஸ்மைலி, பிரச்சனை முடிஞ்சு போச்சு.. பலரின் முகங்கள் வெளிச்சத்துக்கு வந்தாச்சு.. அடுத்து சிறப்பாசிரியர் வேலை நிறைய இருக்குமே.

திசைகள் கட்டுரை படிச்சேன். நல்லா வந்திருக்கு.. அதே மாதிரி தமிழோவியத்திலயும் கலக்கிடணும் சரியா?

செல்வநாயகி said...

லிவிங்ஸ்மைல் வித்யா,

உங்களின் இந்தப்பதிவு எனக்குப் பிடித்திருக்கிறது. அதில் வெளிப்படும் தன்னம்பிக்கை மிகமிகப் பிடித்திருக்கிறது. இதுதான் இன்றைய நம் சமூகத்தின் அறியாமை மற்றும் அடக்குமுறைகளின் கைகளிலிருந்து வெளிவர முக்கியமானது. நீங்கள் எழுத்தாளராக விரும்பி இங்கு வராவிட்டாலும், ஆகிவிடுவீர்களென்று நினைக்கிறேன்:)) இப்பதிவின் சில இடங்களை அதன் மொழியழகுக்காகவும் நான் ரசித்தேன். நன்றி.

செந்தழல் ரவி said...

எனக்கு என்னம்மோ நீங்க ஓவரா விளம்பரம் தேடுறமாதிரி இருக்கு....

என்னா நான் சொல்லுறது...

லிவிங் ஸ்மைல் said...

செந்தழல் ரவி said...
// எனக்கு என்னம்மோ நீங்க ஓவரா விளம்பரம் தேடுறமாதிரி இருக்கு....

என்னா நான் சொல்லுறது... //

அப்படியா..?

இருக்கட்டும் விளம்பரமாவது எங்களுக்கு atleast எனக்காவது எந்தவகையிலாவது உதவுதான்னு பாப்போம்...

சதயம் said...

முதலில் என்னையும், திரு.ஜயராமனையும் ஒரே வரிசையில் வைப்பது சரியில்லை.அடையாளத்துக்கோ அங்கீரத்திற்கோ நான் அலைபவனில்லை.

மேலும் விமர்சனத்திற்கும், அங்கீராத்திற்கும் இடையேயான இடைவெளியை நீங்கள் புரிந்து கொள்ளவில்லை என நினைக்கிறேன்.

செந்தழல் ரவி said...

///வெறும் அனுதாபம்/பச்சாதபம் இதெல்லாம் என்னை எரிச்சலாக்குவன அது எனக்கு வேண்டாம் என்று ///

நீங்கள் வெற்றி பெற்றதுக்கு அதுதான் வித்யா காரணம்...வேண்டுமென்றால் - ஒரு பொதுவான தலைப்பில் - உங்கள் பாலின புலம்பல் தவிர்த்து எழுதி வெற்றிபெற முடியுமா ?

//சிலர் என்னிடம் போனில் தொடர்பு கொண்டு "இதற்காக ப்ளாக்குவதை நிறுத்தலாமா..?" என்ற ரேஞ்சில் புலம்பத்துவங்கி விட்டனர்..///

தலை கனத்துவிட்டது அல்லது சூடாகிவிட்டது என்று அர்த்தம்..எலுமிச்சம்பழம் தேய்த்து ஒரு வெந்நீர் குளியல் போடவும்..

//வெற்றி தோல்வி என் வேட்கையல்ல, வாய்ப்பு மட்டுமே என்பதைக் கூறி., தொடர்ந்து யாரும் பின்னூட்டமிடவும் வேண்டாம் என்றும். குறிப்பாக, என்னை சிறுபிள்ளைத்தனமாக பதில் பின்னூட்டமிடும் வகையில் நிர்பந்திக்க வேண்டாம் என்றும் கேட்டுக் கொள்கிறேன்... //

கண்டிப்பாக செய்தாகவேண்டும்...

மங்கை said...

sesitive ஆன issue ங்ரதுனால நான் பேசாம இருந்தேன்,, but எல்லோரும் போல நானும் உங்க நல்லதுக்கு தான் சொல்றேன்..
criticism - அது நம்மல பத்தி இருந்தாலும் சரி நம்ம படைப்புகளை பற்றி இருந்தாலும் சரி, அத நம்ம self development kku உபயோகிச்சக்கனும்னு நான் நினைக்குறேன்.. பச்சாதாபம் உங்களுக்கு மட்டும் இல்லை எல்லோருக்கும் தான் எரிச்சல் தரும்..
தைரியமா உங்க sexuality ஐ பற்றி
சொல்லி அதற்கான அங்கீகாரத்தையும் கேக்கும் அளவுக்கு பக்குவப் பட்ட நீங்கள் .. இந்த விசயத்தில் அந்த அளவுக்கு பக்குவப்பட்டு approach பன்னலைன்னு தான் நினைக்குறேன்.. . again..உங்கள் நலன் கருதியே இதனை சொல்கிறேன்.. நானும் NGO sector ல் இருப்பவள் தான்.. அதுவும் HIV/AIDS விளிப்புணர்வில் ஈடுபட்டிருக்கிறேன்..
நீங்கள் பச்சாதாபம் வேண்டாம் வேண்டாம் என்று சொல்ல சொல்ல தான் அது இங்க அதிகமாகுது.. உங்க கவிதைக்கு மூன்றாம் பரிசு கொடுத்து இருக்கலாம் என்று சதயம் அவங்க சொன்னது கூட உங்களை சக மனிதர்களில் ஒருவராக அவர் நினைத்து இருக்கிறார் என்று தானே அர்த்தம்,,அத அவர் சொல்லாம விட்டு இருந்தா தான் உங்க மேல இருக்கிற அனுதாபத்தினால சொல்லாம இருக்கிரார்னு நினைக்கலாம்.. அது போல தான் ரவி, கோவி. கண்ணன் மற்றொரு அன்பரும் பெயர் தெரியவில்லை..practicalla சொல்லி இருக்காங்க.. இவர்கள் அனைவரும் உங்களை எந்த வித்தியாசமும் பார்க்காமல் மற்றவர்களுக்கு அவர்கள் இடும் பின்னூட்டம் உங்களுக்கும் இட்டுள்ளனர்.இந்த சமுதாயத்தில் ஒருவராகத்தான் நினைகிறார்கள் என்பதற்கு இது விட வேறு ஆதாரம் தேவை இல்லை..இந்த பிரச்சனையை இப்படியும் எடுத்துக் கொள்ளலாமே
அதை ஏன் வேறு விதமாக எடுத்துக் கொள்கிரீர்கள்,

நீங்கள் ஈடுபட்டிருக்கும் பணியில் இதுபோல பல விமர்சனங்களை எதிர்கொள்ள வேண்டி இருக்கும் என்பது உங்களுக்கு நன்றாக தெரியும்..
உணர்ச்சி வசப்பட்டே நீங்கள் போட்டி முடிவை மறுபரீசலனை செய்யுமாறு கேட்டிகொண்டீர்கள் என்று நினைக்குறேன்..

இங்க பதிவு போடுற எல்லோறுக்கும் தான் இது போல பின்னூட்டங்கள் வருது..gracefull ஆ நீங்க அத கண்டுக்காம விட்டு இருந்து இருக்கலாமோன்னு தோனுது..

அதனால இது போல விமர்னசங்கள் நம்ம approach சரி இல்லைன்னு தான் காட்டுது.. அத உணர்ந்து நீங்க எதை எப்படி எடுத்து கொள்ளவேண்டும் என்று நிதானமாக யோசித்து செயல் பட்டால் உங்கள் இலக்கை அடையலாம் என்பது என் தாழ்மையான கருத்து..

இன்னும் நீங்கள் செய்ய வேண்டியது நிறைய இருக்கு... அத கருத்தில் கொண்டே நான் இத சொல்றேன்..
அதற்கு இன்னும் நிதானம் / பக்குவம் தேவை..

இதுவும் உங்களை பாதிச்சு இருந்தா மன்னிச்சுருங்க,

...((ஏதோ எனக்கு தோனியத சொல்லி இருக்கேன்.. அன்றாட பணியில இது போல பல பிரச்சனைகளை சந்தித்து ஆலோசனை வழங்கி வேண்டியிருக்கு (இது உங்களுக்கே புரியும்னு நினைக்குறேன்)..அப்படி ஒரு பிரச்சனை இங்க நடக்கறப்போ கண்டுக்காம இருக்க முடியலை.. அதான் இந்த பின்னூட்டம்.. வேறு எந்த காரனம்மும் இல்லை சகோதரி..))

கவிதா|Kavitha said...

//நீங்கள் வெற்றி பெற்றதுக்கு அதுதான் வித்யா காரணம்...வேண்டுமென்றால் - ஒரு பொதுவான தலைப்பில் - உங்கள் பாலின புலம்பல் தவிர்த்து எழுதி வெற்றிபெற முடியுமா ?//

அவர்களின் இடத்தில் நின்று எதையும் யோசிக்கனும் ரவி, உங்களின் பேச்சு நீங்கள் ஒருவரது வெற்றியை பார்த்து நீங்கள் புலம்புவது போன்று உள்ளது.. உங்களுக்கு சரியில்லை என்று தோன்றினால், அவர்களின் பதிப்புகளை படிக்காதீர்கள்..

//தலை கனத்துவிட்டது அல்லது சூடாகிவிட்டது என்று அர்த்தம்..எலுமிச்சம்பழம் தேய்த்து ஒரு வெந்நீர் குளியல் போடவும்..//

ரவி யாருடைய மனசும் புண்படும் படி எழுதாதீங்க.. நல்லது இல்லை..

கவிதா|Kavitha said...

//எனக்கு என்னம்மோ நீங்க ஓவரா விளம்பரம் தேடுறமாதிரி இருக்கு....
என்னா நான் சொல்லுறது...//

ரவி இதுல உங்களுக்கு என்ன பிரச்சனை..?!!

செந்தழல் ரவி said...

கவிதா - கோச்சுக்காதீங்க...

உங்களை மாதிரி இவங்களும் என் தோழிதான்...

சும்மா கொஞ்சமே கொஞ்சம் கலாச்சேன் தலைவி...

எப்படி நான் தவறு செய்தா நீங்க திருத்துவீங்களோ - அதேமாதிரி - இந்த தோழி தவறு செய்தா திருத்துவது என் பொறுப்புதானுங்களே..

பார்வைகள் - பலவிதமுங்கோ...

அது ஒவ்வொன்றும் ஒரு விதமுங்கோ...

அதனால கொஞ்சம் அடக்கி வாசிக்க சொல்லும் விதமாகத்தான் கொஞ்சம் கலாய்ப்பு..

இல்லைன்னா ஓவர்டோடாகிடாது ??

கவிதா|Kavitha said...

//பார்வைகள் - பலவிதமுங்கோ...

அது ஒவ்வொன்றும் ஒரு விதமுங்கோ...

அதனால கொஞ்சம் அடக்கி வாசிக்க சொல்லும் விதமாகத்தான் கொஞ்சம் கலாய்ப்பு..

இல்லைன்னா ஓவர்டோடாகிடாது ??//


கலாய்த்தல் என்றால் என்ன ரவி, ஒருவர் மனது புண்படும்படி பேசுவதா.. தவறு ஏதாவது அவர்கள் செய்து இருப்பின் அவர்களின் ஈமெயிலுக்கு தெரியபடுத்தலாமெ.. இப்படி வேண்டாமே.. நீங்கள் பொதுவில் பேசுவதால் நானும் பொதுவில் உங்களுக்கு என் கருத்துக்களை அனுப்புகிறேன்..

அவர்களின் எழுத்து, பொது வாழ்க்கை எல்லாமே சாதனை தான்.. தயவுசெய்து அதை அந்த கண்ணோட்டத்தோடு மற்றும் பாருங்கள்..

செந்தழல் ரவி said...

மங்கை அவர்கள் - எவ்வளோ தெளிவா எழுதி இருக்காங்க பாருங்க...

சமுதாயம் ஏற்றுக்கொள்ள வேண்டும் - அங்கீகரிக்கவேண்டும் என்பது தானே அவங்களோட எதிர்பார்ப்பு ?

ஜயராமன் செய்த ஒரு சாதாரண விமர்சனத்தை கூட ஏற்றுக்கொள்ள முடியாத - பக்குவமற்ற மனம் - இருந்தால் - லி.ஸ்.வி செய்ய நினைப்பதை 10% கூட செய்ய முடியாது கவிதா அவர்களே..

அதனால்தான் ஒரு சின்ன விமர்சன ஷாக் - பொறவு ஒரு அதிரடி பின்னூட்டம்...

இது எப்படி இருக்கு ?

நாங்க தேன் ஏத்துக்கறோமுன்னு சொல்லீட்டமே...

அதுக்கப்புறமும் அதயே சொல்லி புலம்பிக்கினு இருந்தா - வடிவேல் சொல்லுறமாதிரி - சின்னப்புள்ளைத்தனமால்ல இருக்கு

நாடோடி said...

மேடு பள்ளம் இல்லாமல் வாழ்வில் என்ன சந்தோஷம்..
பாறைகள் நீங்கினால் ஓடைக்கெங்கே சங்கீதம்..

மதுமிதா said...

என்னம்மா ஆச்சு புன்னகைச்செல்வி
சிரிச்சிட்டு போயிட்டே இருக்கணும்

ஆமா சொல்லிட்டேன்
எல்லாம் நன்மைக்குதாம்மா

கவிதா|Kavitha said...

//அதனால்தான் ஒரு சின்ன விமர்சன ஷாக் - பொறவு ஒரு அதிரடி பின்னூட்டம்...

இது எப்படி இருக்கு ?//

நல்லா இல்ல !!

சதயம் said...

மங்கையின் பின்னூட்டத்தை நான் வழிமொழிகிறேன்...

Dharan said...

கவிதா
said...

//எனக்கு என்னம்மோ நீங்க ஓவரா விளம்பரம் தேடுறமாதிரி இருக்கு....
என்னா நான் சொல்லுறது...//

ரவி இதுல உங்களுக்கு என்ன பிரச்சனை..?////

அட ரவிக்கு எப்பவுமே இதுதான்
பிரச்சனை..முன்னாடி என் பிளாக்ல வந்து forward mail லாம் போடாதே..தமிழ்மணம் என்ன உன் அப்பன் வீட்டு காசுலேயா நடக்குதுன்னு கேட்ட நாகரீக மனிதர் அவர்..அவரை மாதிரி கருத்துள்ள கட்டுரைகளை எழுதனும்னு
சொல்றாருக்கும..
தமிழ்மணம் இல்லனா என்ன என்று சவடால் பேசிவிட்டு பிறகு போராடி(கெச்சி..கூத்தாடி)தமிழ்மணத்துல பின்னூட்ட அனுமதி பெற்றார்.

living smile தமிழ்மணத்துல விளம்பரம் தேடி நாளைக்கு Hollywood படத்துல நடிக்கப்போறாங்க..

அதுதான் ரவிக்கு கஷ்டம்..

கவிதா|Kavitha said...

//living smile தமிழ்மணத்துல விளம்பரம் தேடி நாளைக்கு Hollywood படத்துல நடிக்கப்போறாங்க..

அதுதான் ரவிக்கு கஷ்டம்//

ஐய்யய்யோ?!..அப்படி ஏதாவது நடந்தால் ரவி தலை வெடித்துவிடும்..! சும்மா இருக்கும் போதே விளம்பரம் தேடறீங்கன்னு சொன்னாரு.. லிவிங் ஸ்மைல், அப்படி நடிக்க எல்லாம் போன ரவி கிட்ட ஒரு வார்த்தை முன்னாடியே சொல்லி, அவர் தலை வெடிச்சதுக்கு அப்புறம் போங்க..

பாரதிய நவீன இளவரசன் said...

Hi Vidhya...

My computer doesnt support Tamil fonts now... unga blogla first time comment pannumbOthu yen time-ai paaththinggalaa :)

Vidhya,

to be honest, first of all I had to agree that I did not read your story.. or poem?

But I am a regular reader of your blogs. Taking little liberty I would like to record my observation here...

Criticisms are unavoidable when one is climbing up the ladder of success; the more you grow, the more virulent will be the criticism on you. Nobody is an exception in this. But while reacting to criticism, please dont loose your cool. Please take it this way - your critics are but putting forth a differnt point of view, whether to concur with it or to disregard it - is only based on the merit of criticism. Taking criticisms in one's stride is a proven positive step in the path of success.

Though I don't wish to go into the merits of the comments of Jayaraman and Sadayam, what I observed is that you have lost your cool and have reacted personally to the critics, which could have been avoidable.

But then, why my comment...? - as a humble reader of your blog, it is only to request you to continue blogging with the same mind as you were doing it before and to respond positively to the comments.....

yennanga vidhya, we are here with you not only to cheer you but also to 'Miguthi-kaN Mersendru idiththar poruttum ... :)