ஆமாம், முக்கியாமன ஒரு வெற்றி என் மகுடத்தில் சேர்ந்துள்ளது..
முதல் முறையாக பங்குபெற்ற ஒரு போட்டி(தேன்கூடு மாதாந்திர போட்டி)யில் இரண்டாவதாக தேர்வானதைக் குறித்து மகிழ்ச்சியோடும், பெருமையோடும் இந்தப் பதிவையிடுகிறேன்...
இதை என் கவிதைக்கான வெற்றியென்பதை விட திருநங்கைகளுக்கான தனி அங்கீரமாகவே எண்ண வேண்டியுள்ளது... அந்த வகையில் என் கவிதைக்கு வாக்களித்து என்னை தேர்வு செய்த நண்பர்களுக்கு ஒரு கோடி நன்றி கூற வேண்டும்... நன்றி நண்பர்களே...
முதல் பரிசினை வென்ற தோழி நிலாவிற்கும், இரண்டாம பரிசை எனக்கு விட்டுக்கொடுத்த வ.வா.ச. சங்க மகளீர் அணித் தலைவி பொன்ஸ்க்கும், (யே.. முதல் மூணு பேரும் பெண்கள் இல்ல.... Really Great...கொண்டாடுவோம் தோழிகளே) என் மனமார்ந்த வாழ்த்துக்கள்....
மாதந்தோறும் இத்தகைய ஆரோக்கியமான போட்டியை நடத்தி வரும் தமிழோவியம்+தேன்கூடுக்கு என் வாழ்த்துக்களும்... பொதுதளத்தில் பங்குபெற எங்களுக்கு ஒரு வாய்ப்பாய் அமைத்தமைக்கு சிறப்பு நன்றிகளும்...
எப்போதும் எனக்கு ஊக்கமளித்து வரும் நண்பர்களுக்கும், நலம் விரும்பிகளுக்கும் உளமார என் நன்றிகள்...
நன்றி.. நன்றி.... நன்றி...... நன்றி........
வென்றேனே!!.. நண்பர்களே நன்றி!!!
Subscribe to:
Post Comments (Atom)
32 நண்பர்கள் புன்னகையை பதித்துள்ளனர்:
வாழ்த்துக்கள்.
வாழ்த்துக்கள் லிவிங் ஸ்மைல் வித்யா( முழு பேரை கரெக்டா சொல்லீட்டேனா?)
இரண்டாம் பரிசு கிடைத்தமைக்கு வாழ்த்துக்கள் தோழியே....
அன்புடன்...
சரவணன்.
நண்பர்கள் பாலபாரதி, குமரன்(நன்றிங்க முழுபேரையும் சொன்னதுக்கு), சரவணன் அனைவருக்கும் என் நன்றிகள்
வாழ்த்துகள் தோழி. என் தேர்வு பரிசு பெற்றிருப்பது மிகுந்த மகிழ்ச்சி தருகிறது.
தொடர்ந்து கலக்குங்கள்
வித்யா
வாழ்த்துக்கள்.
வெற்றி பெற்றமைக்கு வாழ்த்துக்கள் வித்யா.
வாழ்த்துக்கள்!!
வாழ்த்துகள் லிவிங் ஸ்மைல் வித்யா. இரண்டாம் பரிசு என்பதும் பெரிய விஷயமே. இன்னும் பலப்பல பரிசுகள் வெல்ல வாழ்த்துகள்.
நீங்கள் சொன்னது போல இது திருநங்கைகளின் விடயங்களும் பொது நீரோட்டத்தில் கலப்பதை உணர்த்துகிறது (குறைந்த பட்சம் வலைப்பூவிலாவது). இது எங்கும் பரவ வேண்டும் என்று விரும்பி உங்களை மீண்டும் வாழ்த்துகிறேன்.
ஜெயித்ததுக்கு வாழ்த்துக்கள்.
தங்கள் பாட்டு நன்றாகத்தான் இருக்கிறது. கொஞ்சம் புரிந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும்.
ஏன் இத்தனை சோகம், வன்ம்ம், வெறுப்பு அந்த வரிகளில் என்று புரியவில்லை. ஆனால், புரிந்துகொண்டு விடுவேனோ என்று பயமாக இருக்கிறது.
தங்களிடமிருந்து ஒரு பாஸிடிவ்வான, உற்சாகமான, மங்களமான ஒரு பாட்டை எதிர்பார்க்கிறேன்
நன்றி
வாழ்த்துக்கள் !! தொடர்ந்து எழுதி கலக்குங்க..!
லிவிங் ஸ்மைல்,
வித்யா உங்களுக்கு என்னுடைய இனிய மனமார்ந்த வாழ்த்துக்கள்.
vaazhthukkal
//முதல் மூணு பேரும் பெண்கள் இல்ல.... Really Great...கொண்டாடுவோம் தோழிகளே) //
வித்யா, குட் பாயின்ட்
இந்த வெற்றிக்கும் எதிர்கால வெற்றிக்கும் சேர்ந்தே வாழ்த்துகிறேன்
வாழ்த்துக்கள்... தொடர்ந்து வெற்றிகள் குவிய வாழ்த்துகிறேன்
ஸ்மைலி,
//இரண்டாம பரிசை எனக்கு விட்டுக்கொடுத்த //
அட போங்க.. ஏதோ எப்படியோ அங்க வந்துடுச்சு - fluke;) :)))
உங்க கவிதை கிட்டயும் வர முடியாதுங்க..
உங்களுக்கு இரண்டாவது பரிசு கிடைத்தது எனக்கு ரொம்ப ரொம்ப மகிழ்ச்சி :))))
வாழ்த்தும் உள்ளங்கள் முத்துக்குமரன், யோகன் பாரிஸ், சந்திரவதனா, விழிப்பு, மணியன், ராகவன், ஜயராமன், கவிதா, ராம், அனிதா பவன்குமார், நிலா, சத்யம், சின்னக்குட்டி அனைவருக்கும் என் நன்றி
பரிசு பெற்ற மூன்று சகோதரிகளுக்கும் வாழ்த்துக்கள் !
வித்யா,
வாழ்த்துக்கள்!!
மேலும் பல வெற்றிகளைக் குவிக்க வாழ்த்துக்கள்!!
லிவிங்ஸ்மைல் வித்யா!!!!
நான் வாக்களித்தது நாலு பேருக்கு அதில மூணு பேர் பரிசு வாங்கிட்டாங்க.
என்னோட தரவரிசைல அப்படியே பரிசு வந்திருப்பது ஆச்சரியமா இருக்கு.
வாழ்த்துக்கள்.
சிறப்பு ஆசிரியர் பக்கத்தில இன்னும் சிறப்பான கட்டுரைகளை வெளியிடுங்கள்.
அன்புடன்
தம்பி
லிவிங் ஸ்மைல், உங்கள் முதல் வெற்றிக்கு என் வாழ்த்துக்கள்! இன்று உங்களுக்கு கிடைத்த அங்கீகாரம் உங்களை மென்மேலும் வளர்த்தட்டும்.
வாழ்த்துக்களுடம்
We the people
லிவிங்ஸ்மைல்,
உங்களுடைய கவிதையை அப்போது அலுவலகத்தில் அறிமுகம் செய்தேன். நான் அறிமுகம் செய்த அத்தனை பேரையும் நெகிழ வைத்தது.
வாழ்த்துக்கள்...
உண்மையாக சொல்ல வேண்டுமென்றால் இப்பொழுதுதான் கவிதையை புரிந்து படித்தேன்... ஆயிரம் ஊசியை ஒரே சமயத்தில் நெஞ்சில் வாங்கிக் கொண்டு எழுதியிருக்கிறீர்கள். நீங்கள் சொன்னதுபோல ரொம்ப பாதுகாப்பான சூழ்நிலையில் வளர்ந்து விட்டேன்...வாழ்த்துக்கள், போட்டியில் வெற்றி பெற்றதற்க்கு மட்டும் அல்ல!
வாழ்த்துக்கள்...
முதல் போட்டி
அதிலேயே வெற்றி.
-வாழ்த்துக்கள்
நீங்கள் கலந்துகொள்ள வேண்டிய
"போட்டிகளும்" இன்னும் ஏராளம். அதிலும் வெற்றி பெற
வாழ்த்துக்கள்.
உங்க கவிதை ரொம்ப பிரமாதமாக இருந்தது; பாத்துட்டு, சரி, நம்ம கவுஜ எளுதி எங்கியாவது பரிசு வாங்கிடவாவதுன்னு உங்களுக்கு நான் தான் விட்டுக் கொடுத்துட்டேன்...:-)))
அது இல்லீங்க, பினாத்தலார் கதையும், உங்க கவிதையும் படிச்சிட்டு இந்த முறை பங்கெடுக்க வேணாமுனு விட்டுட்டேன், என் திறமையில அவ்வளவு நம்பிக்கை.
மொதல்ல இருந்தே, உங்க கிட்டே நான் வேண்டிக் கேட்டது, நம்பிக்கையை வெளிப் படுத்தும் படைப்புக்கள். ஆனால், நடிப்பு இல்லாத, சாயம் பூசாத சோக/கசப்பு வரிகள் மரணத்துக்கு அருகிலிருந்து எழுதப் பட்டவை போல இருந்தது (சே, நானும் அப்பிடி, இப்பிடின்னு எளுத தொடங்கிட்டேன்...:-(
இன்னும் வளர, வாழ, வாழ்க்கையின் நம்பிக்கையை வெளிப்படுத்த வாழ்த்துக்கள். உங்களால் முடியும் தோழி.
வாழ்த்துக்கள்...!
வாழ்த்துகள்
லிவிங் ஸ்மைல் வித்யா,
வெற்றி பெற்றமைக்கு வாழ்த்துக்கள்! :)))
தமிழோவியத்தில் வரப்போகும் உங்கள் ஆக்கங்களை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்!
indh cerri ungalai endha alavukku urchagapaduthiyulladhu enbadhai nan arivane..adhey urchagathoda//thodarndhu nandraaaga eluthungal..eaninil ini ungal padivai niraiya per thodarndhu paarvai iduvaargal..avargalil nanum oruvan..nandri valthukkal..nanbiye
வாழ்த்துக்கள்.
அன்பார்ந்த லிவிங் ஸ்மைல் வித்யா!மனமார்ந்த வாழ்த்துக்கள் !!!.
Post a Comment