தேன் கூடு போட்டி "மரணம்"



எதை இழக்கிறோம் என்ற மயக்கத்தில்

அனஸ்தியா இல்லாமலே அறுத்துக் கதறும் நொடியிலும்..



செருப்புக்கடியில் தன்மானத்தை
ஒரு மலமென்றே மிதித்தபடி

கைநீட்டி கேவலப்பட்டு நிற்கும் நாட்களிலும்...



வன்மத்துடன் நுழையும் குறியால் மூச்சுமுட்ட

நுரையீரல் திணறி நிற்கும் நிலையிலும்...



எதற்கென்றே புரியாமல் எங்களை நோக்கி துப்பப்படும்

வீச்சமடிக்கும் எச்சில்களைக் கேட்கிறேன்



மரணம் மட்டுமா மரணம்...?

65 நண்பர்கள் புன்னகையை பதித்துள்ளனர்:

senthil.c.kumaran@gmail.com (செந்தில் குமரன்) said...

///
வன்மத்துடன் நுழையும் குறியால் மூச்சுமுட்ட

நுரையீரல் திணறி நிற்கும் நிலையிலும்...
///

உருக்கி விட்டது என்னை உங்கள் வரிகள். போட்டி என்பதெல்லாம் இரண்டாம் பட்சம் என்றாலும் போட்டியில் இது கண்டிப்பாக வெற்றி பெற வேண்டும் என்று விரும்புகிறேன்.

லிவிங் ஸ்மைல் said...

தொடந்து ஊக்குவித்து வரும் நண்பர் குமரணுக்கு என் நன்றி.,

G.Ragavan said...

ஐயோ! பக்குன்னு இருக்குங்க. அனஸ்தீசியா இல்லாமலா....ஏன் அப்படி?

நுழைக்கிறதுல வன்மம் எப்படி வரும்? அதாவது அது பாலியல் வன்முறையா?

இப்படியெல்லாம் நடக்க முடியும்னா நீங்க சொன்ன மாதிரி மரணம் மரணமேயில்லை.

நாமக்கல் சிபி said...

//எதற்கென்றே புரியாமல் எங்களை நோக்கி உமிழப்படும்

வீச்சமடிக்கும் எச்சில்களைக் கேட்கிறேன்



மரணம் மட்டுமா மரணம்...?//

அருமையாகக் கேட்டிருக்கிறீர்கள்.
சுட்டெரிக்கும் கேள்வி!
பாராட்டுக்கள்.

//கண்டிப்பாக வெற்றி பெற வேண்டும் என்று விரும்புகிறேன்.
//
நானும் அவ்வாறே விரும்புகிறேன்.

போட்டியில் பெற்றி பெற வாழ்த்துக்கள்.

ரவி said...

அழுத்தம் அதிகம்..ஆனாலும் பதிவு செய்திருக்கிறீர்...

வெற்றி பெற வாழ்த்துக்கள்.

லிவிங் ஸ்மைல் said...

// நுழைக்கிறதுல வன்மம் எப்படி வரும்? அதாவது அது பாலியல் வன்முறையா?- ragavan //

வன்முறையென்றும் சொல்லமுடியாது, ஆனால், வன்புணர்ச்சி...

தெரிந்ததுதான் என்றாலும், விருப்பமில்லாதவரை வற்புருத்துவதும் நடக்கிறது. அந்நிலையில், அது வன்முறை தானே...

// இப்படியெல்லாம் நடக்க முடியும்னா - ராகவன் //

பாதுகாப்பாகவே வளர்ந்து விட்டீர்கள் என்று தெரிகிறது, உண்மையாக இப்படித்தான் நடக்கிறது...

வாழ்த்துக்களை பின்னூட்டமிட்ட நண்பர்கள் ராகவன், சிபிச்செல்வன், செந்தழல் ரவி அனைவருக்கும் நன்றி...

G.Ragavan said...

// வன்முறையென்றும் சொல்லமுடியாது, ஆனால், வன்புணர்ச்சி...

தெரிந்ததுதான் என்றாலும், விருப்பமில்லாதவரை வற்புருத்துவதும் நடக்கிறது. அந்நிலையில், அது வன்முறை தானே...//

ஆமாம். நிச்சயமாக. வன்புணர்ச்சி என்பது வன்முறைதான். மனைவி அனுமதி இன்றி கணவனே தொடக் கூடாது என்ற நிலையில் இது நிச்சயம் வன்முறைதான். திருநங்கைகளும் நியாயமான நாகரீகமான வழிகளில் தங்கள் விருப்பங்களை நிறைவேற்றிக் கொள்ள ஆண்டவனை வேண்டுகிறேன். இப்பொழுதைக்கு அதுதான் முடியும்.

// // இப்படியெல்லாம் நடக்க முடியும்னா - ராகவன் //

பாதுகாப்பாகவே வளர்ந்து விட்டீர்கள் என்று தெரிகிறது, உண்மையாக இப்படித்தான் நடக்கிறது...//

ஆமாம் வித்யா. நான் மட்டுமல்ல இங்கு பலரும் அப்படித்தான் என நினைக்கிறேன். எருது புண் காக்கைக்குத் தெரியுமாங்குறது எவ்வளவு சத்தியமான பேச்சு.

கருப்பு said...

குட்டிரேவதி, சல்மா போன்றவர்கள் முலைகள், புணரத்துடிக்குது யோனி போன்று காமமாக கவிதை எழுதுவார்கள்.

தாங்கள் தயவு செய்து நல்ல கவிதைகளாக எழுதுங்கள்.

காமத்தோடு எழுதினால்தான் சிறந்த கவிஞர் என்பதெல்லாம் இல்லை!

லிவிங் ஸ்மைல் said...

// தாங்கள் தயவு செய்து நல்ல கவிதைகளாக எழுதுங்கள் -- விடாது கறுப்பு//

கண்டிப்பாக முயற்சி செய்கிறேன்..

// காமத்தோடு எழுதினால்தான் சிறந்த கவிஞர் என்பதெல்லாம் இல்லை! //

நிச்சயாமாக இல்லை தான்...

// வன்மத்துடன் நுழையும் குறியால் மூச்சுமுட்ட

நுரையீரல் திணறி நிற்கும் நிலையிலும்... //

இந்த வரிகள் உங்களுக்கு சாருவைப் (நிச்சயமாக, குட்டி ரேவதியோ, சல்மாவோ இல்லை)போல சரோஜா தேவி writtingதான் என்றுபட்டால் sorry, கறுப்பு உங்களை என்னால் புரிந்து கொள்ள முடிய வில்லை.

ஒன்றை மட்டும் கூடுதலாக சொல்லிவிடுகிறேன்.. ஏழு ரவுடிகளால் தூக்கிச் செல்லப்பட்டு வன்புணர்ச்சிக்காலானவளை என்றாவது நேரில் சந்தித்திருந்தால் உங்களுக்கு காமத்தின் மெய்பொருள் தெரிந்திருக்கும்.. நல்ல விவாததை தொடக்கியுள்ளீர்கள் நன்றி...

உங்கள் நண்பன்(சரா) said...

//குட்டிரேவதி, சல்மா போன்றவர்கள் முலைகள், புணரத்துடிக்குது யோனி போன்று காமமாக கவிதை எழுதுவார்கள்.

தாங்கள் தயவு செய்து நல்ல கவிதைகளாக எழுதுங்கள்.
//

நிச்சயமாக என் தோழி அவர்கள் அளவிற்க்கு தரம் தாழ்ந்து எழுதமாட்டாள்.


//ஏழு ரவுடிகளால் தூக்கிச் செல்லப்பட்டு வன்புணர்ச்சிக்காலானவளை என்றாவது நேரில் சந்தித்திருந்தால் உங்களுக்கு காமத்தின் மெய்பொருள் தெரிந்திருக்கும்//

உண்மை.

தொடந்து எழுதுங்கள்.


அன்புடன்...
சரவணன்.

Jazeela said...

நல்ல அழகான கவிதை.

ஒரே ஒரு வேண்டுகோள். 'என்னை பற்றி என்ற பிரிவில் அரவாணி என்ற அடைமொழியை நீக்கவும். உங்களை நீங்களே ஒரு வட்டத்திற்குற்படுத்தி இருப்பது நல்லதல்ல. ஏதோ சொல்ல வேண்டும் என்று தோன்றியது. உங்கள் இஷ்டம்.

Unknown said...

yes you are absolutely right.

aaradhana said...

கடவுள் முன்பு யாவரும் ஒன்றே! ஏன் தங்களைப் பிரித்துக்கொள்கிரீர்கள்? அர்த்தமுள்ள கவிதை.

லிவிங் ஸ்மைல் said...

// என்னை பற்றி என்ற பிரிவில் அரவாணி என்ற அடைமொழியை நீக்கவும். உங்களை நீங்களே ஒரு வட்டத்திற்குற்படுத்தி இருப்பது நல்லதல்ல - ஜெஸிலா //

// கடவுள் முன்பு யாவரும் ஒன்றே! ஏன் தங்களைப் பிரித்துக்கொள்கிரீர்கள்? ஆராதனா //

திருநங்கை என்ற அடைமொழியில்லாமல் வந்தால் நான் யார் என்பதும், இவைகளை (வலைப்பதிவை) நான் இடுவதற்கும் அர்த்தமும் இல்லாமல் போய்விடும்...

கடவுள் முன் அனைவரும் ஒன்றே என்பது நீங்கள் அறிந்திருப்பது அனைவருக்கும் புரிந்திருந்தால் எங்கள் வாழ்க்கையில் இந்த பாடுகள் ஏதும் இல்லாமலேயே போயிருக்கும்..

ஆக, எங்களுக்கான சுதந்திரதிற்கு நாங்கள் போராட வேண்டியுள்ளது... அதற்கு எங்களை அடையாளப் படுத்தி வெளிவரவேண்டியுள்ளது... இது எந்த வகையிலும் எங்களை நாங்களே தாழ்த்திக் கொள்வதாகாது.. அப்படி ஒரு தாழ்வு மனப்பான்மையும் எனக்குக் கிடையாது..

பின்னூட்டமிட்ட தோழிகளுக்கு என் நன்றிகள்..

Thank you very much delphine(What it means?) mam,

மலைநாடான் said...

//எங்களுக்கான சுதந்திரதிற்கு நாங்கள் போராட வேண்டியுள்ளது... அதற்கு எங்களை அடையாளப் படுத்தி வெளிவரவேண்டியுள்ளது... //

தேழி!

ஒலிப்பது ஒரு போரளியின் குரல். வெல்வாய்நீ!

Raj Chandirasekaran said...

அவள் விகடனில் உங்கள் பேட்டியைப் படித்தேன். வாழ்த்துக்கள் வித்யா. உங்கள் நம்பிக்கையும், உழைப்பும் நீங்கள் அடைய விரும்பிய லட்சியங்களை அடைய வழி வகுக்கும்.

ஜோ/Joe said...

சகோதரி,
உங்களைப்பற்றி அவள் விகடனில் கவர் ஸ்டோரியே வந்திருக்கிறதே! மகிழ்ச்சி!

http://www.vikatan.com/aval/2006/jul/21072006/aval0404.asp

ஜோ/Joe said...

சகோதரி,
உங்களைப்பற்றி அவள் விகடனில் கவர் ஸ்டோரியே வந்திருக்கிறதே! மகிழ்ச்சி!

http://www.vikatan.com/aval/2006/jul/21072006/aval0404.asp

வெளிகண்ட நாதர் said...

நீங்கள் என்னுடய பதிவான 'The Phantom of the Opera- திரைக்குப்பின்னே!' பின்னூட்டாம் இட்ட பின் என்னுட்ய பதிவுக்கு வரும் அநேக பதிவாளர்களில் ஒருவர் என இருந்துவிட்டேன்! உங்கள் கவர் ஸ்டோரி பற்றி அவள் விகடனில் படித்தவுடன் சற்றென ஒரு பொறி! வந்து விவரம் கண்டால் நீங்கள், என்னுடய வாழ்த்துக்கள்!

போட்டியிலே சமபங்குதாரராக இருந்தாலும் வெற்றி பெற என் வாழ்த்துக்குள்!

மதுமிதா said...

///எதற்கென்றே புரியாமல் எங்களை நோக்கி உமிழப்படும்
வீச்சமடிக்கும் எச்சில்களைக் கேட்கிறேன்
மரணம் மட்டுமா மரணம்...?///

நன்று வித்யா

வீச்சமடிக்கும் எச்சில் மனிதர்களை இன்னும் வீறு கொண்ட வார்த்தைகளால் எவ்வளவோ கேட்கலாம்.

உண்மையிலேயே மரணம் மட்டுமே மரணம் அல்ல வித்யா.

நன்மனம் said...

உள்ள உணர்ச்சியை வார்த்தையில் காட்டமாக காட்டி உள்ளீர்கள்! (சில எழுத்தாளர்கள் போல் இது வெறும் வார்த்தையாக இருக்காது, உணர்ச்சியாக பார்க்க வேண்டும்... சரியா!)

போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள்.

லிவிங் ஸ்மைல் said...

வாழ்த்துக்களை பின்னூட்டமிட்ட நண்பர்கள் மலைநாடன்., ராஜமோகன், மதுமிதா.,ஜோ, வெளிகண்ட நாதன், நன்மனம் அனைவருக்கும் என் நன்றிகள்....

பத்மா அர்விந்த் said...

வித்யா; கவிதை நன்று. நடந்த சம்பவங்களை எழுதினாலே காமம் என்றூ சொல்பவர்கள் இவற்றை செய்பவர்களை கண்டிக்காவிட்டால் கூட பரவாயில்லை, தன் வலியை சொல்லும் ஒருவரிடம் அறிவுரை கூறாமலாவது இருக்கலாம்.

Unknown said...

வித்யா, ஒவ்வொரு வார்த்தையும் வலிகளைச் சொல்லுகின்றன. அழுத்தமான கவிதை.

மற்றவர்கள் சொல்கிறார்கள் என்பதற்காக உங்களது அடையாளங்களை மறைத்துக்கொள்ள வேண்டாம். உங்களது போராட்டத்திற்கு அந்த அடையாளம் தேவை.

காமத்தினை பற்றிய கவிதைகளுக்கும் வலியிலை பற்றிய கவிதைகளுக்கும் கறுப்புக்கு வித்தியாசம் தெரியவில்லை என்று நினைக்கிறேன். வித்யாவின் கவிதையில் காமம் தெரியவில்லை, வலி தெரிகிறது. உணர்வுகளைத் தாக்குகிறது.

பொன்ஸ்~~Poorna said...

//மரணம் மட்டுமா மரணம்...?//
:(((((

உங்கள் கவிதைகளைப் படித்து முடிக்கும் போது ஏற்படுவது சொல்வறுமையும்.. பிரமிப்பும்.. தவிர்க்க முடியாத சோகமும்.. இயலாமையின் தளர்ச்சியும்..

உண்மைதான்.. ராகவன் சொல்வது போல் நானெல்லாம் பாதுகாப்பாக வளர்ந்து வாழ்ந்துகொண்டிருக்கிறேன்..

கார்த்திக் பிரபு said...

hi living smail..vaalthukkal..kavidhai nandraaga irukiradhu..ungalai nan saga valai padhivaalaravey madhikirane...adhalal ennaku neengal ungal profilil aravani endru kuripiitirupadhu theriya villai..

லிவிங் ஸ்மைல் said...

வாழ்த்துக்களை பின்னூட்டமிட்ட நண்பர்கள் KVR, பொன்ஸ், கார்த்திக் அனைவருக்கும் என் நன்றிகள்....

கதிர் said...

வித்யா,

உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் கவிதை.


ஒடுக்கப்பட்ட சமூகத்தில இருந்து ஒலிக்கும் ஒரு குரல். உங்கள் குரல் சமூகத்தில் மாற்றங்களை நிகழ்த்த எனது வாழ்த்துக்கள்.

அன்புடன்
தம்பி

aruna said...

மனதை ஏதோ செய்கிறது உங்கள் கடைசி வரி ! அழுத்தமான வார்தைகளால் சுடும் நிஜங்கள்!

லிவிங் ஸ்மைல் said...

வாழ்த்துக்களை பின்னூட்டமிட்ட நண்பர்கள் தம்பிக்கும், அருணாவிற்கும் மிக்க நன்றி...

Jeyapalan said...

// பாதுகாப்பாகவே வளர்ந்து விட்டீர்கள் என்று தெரிகிறது, //

மிகவும் யதார்த்தமான் வரிகள். மிகச் சிறிய வசனத்தால் மிகப் பெரிய விசயத்தைச் சொல்லிவிட்டீர்கள். இது போன்ற பல அவஸ்தைகளைத் தெரிந்து கொள்ளாமல் பலர் இருக்கிறார்கள். வாசித்துக் கூட அறிய மாட்டார்கள் பலர். அனுபவிப்பதா??

குழந்தைப் போராளி என்ற ஒரு நூலை ஒருவர் பதிவிலிடுகிறார், தவறாமல் வாசிக்கிறேன். கொடுமைகளின் விளைவு என்ன என்பதைச் சொல்லும் ஒரு நூல்.

உங்கள் கவிதைக்குப் பாராட்டுக்கள். கவிதையில் விரசம் தெரியவில்லை. கோபம் தான் தெரிகிறது. தொடருங்கள்.

Clown said...

True. Death alone is not Death.
I can write lot of positive comments.

Yet when ever I come across any articles or interviews by ThiruNangais I get few daunting questions inside

1)Why they always go to Mumbai and go into prostitution or begging?
2)Is any one compelling all these people to do only these two?
3)I really do not know they tried entering into any of the educational institutions for study or they tried any other work?
4)It is only the teasings by strangers that make you decide to head towards Mumbai?
5)Police do not treat you humane regardless of the educational/financial capacity?
6)All parents simply abandon Thirunangais? No parent has any love towards them?
7)Don't you think selecting Prostitution or Begging gives ThiruMangais a wrong StereoType to the Soceity?
8)Why can't these people make other prople understand themselves by distributing bit notices writing the facts that this is natural.
9)You know 80/20 principle right?
Make 80 percent of the overall good people understand who you are and assert your existence like what you are doing now.

By "you" i address the community of ThiruNangai. Why can't you reach with TV ads by saying "We are also human beings?" This is not worser than begging or protitution. People definitely have a hot for you and will accpet you happily.


I am not in any way against any of my fellow beings.I emphasize this because these questions should not be misinterpreted.

பொன்ஸ்~~Poorna said...

வாழ்த்துக்கள் ஸ்மைலி..

(முழுப் பெயரைச் சொல்வது கஷ்டங்க.. தோழி பெயரை நானே சுருக்கிவிட்டேன்..) :))

Muthu said...

போட்டியில் வெற்றிபெற்றமைக்கு வாழ்த்துக்கள் தோழி.
இதை வெறுமனே ஒரு போட்டியில் வெற்றி என்பதை காட்டிலும் சில அவலங்களை எங்களுக்கு தோலுரித்து காட்டியுள்ளீர்கள்.
[இதனை முன்பே படித்தாலும், இதன் வார்த்தைகள் தந்த அதிர்வில், மிகுதியான அழுத்தத்தோடு ஏதுமே சொல்லாமல் சென்றுவிட்டேன்.]

தி. ரா. ச.(T.R.C.) said...

வாழ்த்துக்கள் தி. ரா.ச

நாமக்கல் சிபி said...

தேன்கூடு போட்டியில் உங்கள் படைப்பு இரண்டாமிடம் பெற்றுள்ளது.

வாழ்த்துக்கள்!

துளசி கோபால் said...

போட்டியில் வென்றதற்கு வாழ்த்து(க்)கள் வித்யா.

சந்தோஷமா இருக்கு உங்கள் ஜெயிப்பு.

- யெஸ்.பாலபாரதி said...

தேன்கூடு போட்டியில் வெற்றி பெற்றமைக்கு வாழ்த்துக்கள் லிவிங் ஸ்மைல்!

Gopalan Ramasubbu said...

//மரணம் மட்டுமா மரணம்...?//

Excellent lines.
Hope you win the prize.All the very best.:)

senthil.c.kumaran@gmail.com (செந்தில் குமரன்) said...

வாழ்த்துக்கள்... :-)))

அருள் குமார் said...

வாழ்த்துக்கள் வித்யா :)

Unknown said...

வாழ்த்துக்கள்... :))

லிவிங் ஸ்மைல் said...

வாழ்த்திய நண்பர்கள் ஜெயபால், clown, பொன்ஸ், சோழநாடன், தி.ரா.ச (t.r.c), நாமக்கல் சிபி , துளசி கோபால், யெஸ். பாலபாரதி, கோபலன் ராமசுப்பு, குமரன், அருள் குமார் அனைவருக்கும் என் நன்றி...

VSK said...

வாழ்த்துகள், "வாழும் புன்னகை" வித்யா!

மதுமிதா said...

வாழ்த்துகள்மா
தொடர்ந்து எழுதுங்கள்
கனவுகள் நனவாகட்டும்

நன்மனம் said...

வாழ்த்துக்கள் லிவிங் ஸ்மைல் வித்யா!!!!

மேன்மேலும் பல வெற்றிகள் பெற வாழ்த்துக்கள்.

ILA (a) இளா said...

போட்டியில் வெற்றி பெற்றமைக்கு வாழ்த்துக்கள்!

யாத்ரீகன் said...

வெற்றிக்கு வாழ்த்துக்கள் லிவிங் ஸ்மைல் வித்யா.. படிகளில் முன்னேறிக்கொண்டிருக்கின்றீர்கள்.. உங்கள் எழுத்தை மேலும் கூர்தீட்டிக்கொள்ள ஒரு சந்தர்ப்பம், நினைத்ததை அடைய வாழ்த்துக்கள்..

வல்லிசிம்ஹன் said...

வாழ்த்துக்கள் ஸ்மைல்ஸ்.நீங்கள் எப்போதும் சிரித்த வண்ணம் சந்தோஷமாக இருக்க வேண்டும்.

சின்னக்குட்டி said...

போட்டியில் வெற்றி ஈட்டியதுக்கு வாழ்த்துக்கள்.......

லிவிங் ஸ்மைல் said...

வாழ்த்தும் உள்ளங்கள் தேவ், SK, மதுமிதா, நன்மனம், இளா, யாத்ரீகன், மனு, சின்னகுட்டி, தேவ் அனைவருக்கும் என் நன்றிகள்...

G Gowtham said...

லிவிங் ஸ்மைல் வித்யா,
மனமார்ந்த வாழ்த்துக்கள்.
தேன்கூட்டுக்கும் தமிழ்மணத்துக்கும் பாராட்டுக்கள்.
வாக்களித்த அனைவருக்கும் கை குலுக்கல்கள்.
சரியானது வென்றே தீரும், வெற்றியாளர்கள் வாழ்க:வளர்க!
அழியா அன்புடன்..
ஜி கௌதம்

பரத் said...

மிக அருமையான கவிதை
வெற்றி பெற்றதற்கு வாழ்த்துக்கள்

சிறில் அலெக்ஸ் said...

இதை முன்னமே படிக்காமல் போனதற்கும்.. பின்னுட்டமோ வாக்கோ இடாமல் போனதற்கும் மனம் வருந்துகிறேன்.

வெரும் நாக்கில் வரும் வரிகளல்ல இவை ..தீ நாக்கில் தெறிக்கும் அக்கினி குஞ்சுகள். ஒரு தலைவரும் பத்துபேரும் சேர்ந்து செய்வதுதான் புரட்சியா... தனியாளாய், நம்மை தாழ்த்திக்கொண்டிருப்பவர்கள் முன் தலை நிமிர்ந்து நடந்தாலே புரட்சிதான் என்பதை நிருபிக்கிறீர்கள்.

மரணம் மட்டுமா மரணம் :)
எதிர் கேள்வியாய்
உயிர்வாழ்வது மட்டுமா வாழ்க்கை.

வாழ்த்துக்கள் வித்யா.

செல்வநாயகி said...

உங்கள் பதிவுகளையும், வலிகளைத் தாண்டி வெற்றி பெற்ற போராட்டகுணத்தையும் கண்டு மகிழ்கிறேன். வெற்றிகளுக்கு வாழ்த்துக்கள்! நிறைய எழுதுங்கள்!

வெற்றி said...

இப்போது தான் உங்களின் கவிதையைப் படித்தேன். சில வரிகள் விளங்கவில்லை.

//வன்மத்துடன் நுழையும் குறியால் மூச்சுமுட்ட

நுரையீரல் திணறி நிற்கும் நிலையிலும்...//

இவ்வரிகளின் பொருள் என்ன ?

-L-L-D-a-s-u said...

லிவிங் ஸ்மைல் வித்யா,
எங்களின் பார்வையை மாற்றும் மிக அருமையான கவிதை .
போட்டியில் வெற்றி பெற்றமைக்கு வாழ்த்துக்கள்!

Darren said...

/////உங்கள் நண்பன் said...
//குட்டிரேவதி, சல்மா போன்றவர்கள் முலைகள், புணரத்துடிக்குது யோனி போன்று காமமாக கவிதை எழுதுவார்கள்.

தாங்கள் தயவு செய்து நல்ல கவிதைகளாக எழுதுங்கள்.
//

நிச்சயமாக என் தோழி அவர்கள் அளவிற்க்கு தரம் தாழ்ந்து எழுதமாட்டாள்/////

திரு.உங்கள்நண்பன் அவர்களே,

சல்மா, குட்டிரேவதி யின் எழுத்துகள் தரம் தாழ்ந்தவை என்று சொல்வது ஏற்புடையது அல்ல.5 ம் வகுப்பு பெண்னை 5 பேர் பாலியல் பலாத்காரம் செய்யும் நாட்டில்தான் நாம் வாழுகிறோம்..இதற்கு காரணம் என்ன? நிர்வாணம், காமம் ,தாம்பத்தியம்,பற்றி பேசினால் எழுதினால்....இதெல்லாம் ஏதொ பெரிய பாவம் என்றூ சொல்லியே அதைப்பற்றிய ஒரு தெளிவு இல்லாமல் AIDS ல் முதலிடத்திற்காக போராடும் நாட்டை உருவாக்கியதுதான் உங்களைப் போன்றவர்களின் சாதனை.

தரம் பற்றிய உங்களின் அளவுதான் என்ன?

உங்களின் சிந்தனைகளுக்கு ஒத்துவரவில்லை என்றால் அதை எழுதுபவர்கள் தரமற்றவர்களா???..

உங்களில் எத்தனை பேர் திருநங்கை.வித்தியாவுடன் ஒன்றாக வெளியிடங்களுக்கு செல்வீர்கள்? இணையத்தில் ஆதரவு என்பதெல்லாம் வேஷம்..

இந்தியாவில் ஒன்றாக வெளியில் சென்றால் பார்வைகளின் அர்த்தம் நான் சொல்லி உங்களுக்கு தெரியவேண்டியதில்லை..
நான் இருக்கும் நாட்டில் உள்ளவர்களின் பார்வைகள் வேறு...என்னால் எந்த வேறுபாடும் இல்லாமல் இங்கே அவர்களைப் போன்றவர்களுடன் பழக முடிகிறது...இந்தியாவில் கண்டிப்பாக இது சாத்தியமில்லை..பார்வைகளின் அகலம் குறைவு..நிஜத்தை ஏற்றுகொள்ளூம் மனப்பான்மை குறைவு..காரணம் என்ன? போலியான கலாச்சாரங்கள்..மறைந்திருந்து பார்ப்பவன் நல்லவன் .. வெளிப்படையாகப் பேசுபவன் எழுதுபவன் எல்லோரும் தரம் தாழ்ந்தவர்கள் உங்களைப்போன்றவர்களின் பார்வையில்...

ஆண், பெண், திருநங்கை இந்த மூன்று பிரிவுகளை ஏற்றுக்கொண்டு அவர்களுக்கு உரிய அங்கிகாரத்தை தரவேண்டும் அதை விடுத்து மற்ற ஆதரவு பேச்சுகள் எல்லாம் அனுதாப பேச்சுகளே தவிர வேறு ஒன்றுமில்லை.
அவர்கள் எதிர்பார்ப்பது அவர்களுக்குரிய அங்கீகாரத்தை, அனுதாப நட்பை அல்ல.
திமுக அரசு திருநங்கைகளுக்கு ration card தர உத்தரவிட்டிருப்பதாக அறிந்தேன்..நல்ல தொடக்கம்.

வித்தியா அவர்களே.. என் கருத்துகள் உங்களை புண்படுத்தி இருந்தால் வருத்தம்தெரிவித்துக்கொள்கிறேன்

Premalatha said...

Congratulations on winning the competition Vidhya.

Unknown said...

வாழ்த்துக்கள் லிவிங் ஸ்மைல்,

நெஞ்சைப்பிழியும் கவிதை, பொட்டிலடிக்கும் கேள்வியே கவிதைக்கு சிகரம்.

லிவிங் ஸ்மைல் said...

கவிதை குறித்த தங்கள் கருத்துக்களையும், வாழ்த்துக்களையும் பின்னூட்டமிட்ட நண்பர்கள் ஜி. கௌதம், பரத், சிறில் அலெக்ஸ், செல்வ நாயகி, வெற்றி,
--l-l-d-a-s-u---(What is this..?), தரண், பிரேம லதா, துபாய்வாசி அனைவருக்கும் மனமார்ந்த என் நன்றிகள்....

துபாய் ராஜா said...

அன்பார்ந்த லிவிங் ஸ்மைல் வித்யா!மனமார்ந்த வாழ்த்துக்கள் !!!.

( கவிதை படிக்கும் எங்களுக்கே வலிக்கிறது என்றால்......,
தோழியே ! உனது சோகம் புரிகிறது.)

thiru said...

தோழீ,

உணர்வுகளை வார்த்தையில் இதைவிட உருக்கமாக சொல்ல இயலுமா தெரியவில்லை. மனிதர்கள் என்று சொல்லும் ஒவ்வொருவரும் படிக்க வேண்டிய கவிதை. சகமனிதர்கள் உணர்வுகளை மதிக்க வைக்க உங்கள் படைப்புகள் தொடரட்டும். உரக்க உணர்வுகளை பேசுங்கள், முழுமனித விழுமியங்கள் பிறக்க உங்கள் படைப்புகள் பயன்பட வாழ்த்துக்கள். கனவுகள் மெய்ப்பட தொடர்ந்து போராடுங்கள்! விடியல் வாசல் தேடி வரும்.

தோழமையுடன்,
திரு

லிவிங் ஸ்மைல் said...

வாழ்த்துக்களை பின்னூட்டமிட்ட துபாய் ராசாவிற்கும், திருவிற்கும் நன்றி..

hai, dubai wat abt u marriage life, hope n wish be nice...

முடிந்தால் ஒரு பதிவும் போடலாம் தானே....?!

Unknown said...

I don't know how to express my emotions while reading this...Keep up ur good work....HATS OFFF..Keep :) always :) :) :) :)